
அதையடுத்து, விமானம் மூலமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்தின் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அற்புதமான ஆட்டத்தை பெல முறை வெளிப்படுத்தியுள்ளார்.
விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப பந்த்திற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றில் 2 ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அடுத்ததாக 6 வாரங்கள் கழித்து மேலும் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியுள்ளது
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டின் பெரும்பாலான ஆட்டங்களில் ரிஷப் பந்த் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெறுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
SOURCE;news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments