
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சிறந்த விளையாட்டாளருக்கும் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கும் மட்டும் விருதுகள் வழங்கவில்லை.
சிறந்த ரசிகருக்கும் விருதும் வழங்கப்படும்.
அது யாராக இருக்கும்? இதோ நியமனங்கள்....
1. சவுதி அரேபியாவைச் (Saudi Arabia) சேர்ந்த அப்துல்லா அல் சால்மி (Abdullah Al Salmi) தமது சொந்த ஊரான ஜித்தாவிலிருந்து (Jeddah) கத்தாருக்கு நடைப்பயணம் (Qatar) மேற்கொண்டார். அவர் சவுதி அரேபிய அணிக்கு ஆதரவு அளிக்க அவ்வாறு செய்தார்.
2. ஏராளமான அர்ஜென்ட்டினா ரசிகர்கள் கத்தாரிலுள்ள விளையாட்டு அரங்குகளில் திரண்டிருந்தனர். அதோடு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றி வாகை சூடி நாடு திரும்பிய காற்பந்து வீரர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
3. கத்தாரின் விளையாட்டு அரங்குகளை ஆட்டங்களுக்குப் பின்னர் சுத்தப்படுத்திய ஜப்பானிய ரசிகர்கள். உலகெங்கும் உள்ள மக்கள் அந்தக் காட்சியைக் கண்டு பூரித்துப் போயினர். ஜப்பான் வெற்றி பெறவில்லை என்றாலும் அது கண்டிப்பாக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளது.
SOURCE;seithi.mediacorp
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments