தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. உலகில் நடக்கும் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் நாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். இன்றைய நிலையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத ஒருவர் கூட இல்லை என்று உறுதியாக கூறலாம். அந்த அளவிற்கு அனைவரும் ஏதாவது ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிலர் இந்த சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி பல மணி நேரம் அதிலேயே செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் என்ன விதzமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்துள்ளீர்களா?
நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் உண்டாக்கும் பாதிப்புகள் :
குழந்தைகளின் பத்தாவது வயது முதல் அவர்களது மூளையானது சில அடிப்படை மாற்றங்களை தனக்கு தானே செய்து கொள்ளும். அது மற்றவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் எண்ணமும், தனக்கென்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். அந்த சமயத்தில் தான் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பெற முடியும். மிக எளிதாகவே தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் கவனமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் தன்னைத்தானே குறைவாக நினைத்துக் கொள்கின்றனர். இதனால் தாழ்வு மனப்பான்மை அவர்களுக்கு உருவாகிறது. இதைத் தவிர நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் செலவழிக்கும் போது ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் பார்னோகிராஃபி ஆகியவற்றிற்கும் அவர்கள் அடிமையாக வாய்ப்பு உள்ளது
சமூக வலைத்தளங்களில் நீண்ட நேரம் செலவழிக்கும் போது அவை நம்முடைய நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வாறு இருக்கும் நபர்களுக்கு ஏடிஎச்டி, மன அழுத்தம் மற்றும் மனசோர்வு ஆகியவையும் உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து தம் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சில எல்லைகளை வகுக்க வேண்டும். அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை கண்காணிப்பதும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் பெற்றோர்களின் கடமையாகும்.
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி வெளியே உலகத்தோடு பழகி பல விஷயங்களை கற்றுக் கொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளை சமூக வலைத்தளங்களில் இருந்து விலக்கி வைப்பது எப்படி?
குழந்தைகளுக்கு பக்க பலமாக இருங்கள்:
உங்கள் பிள்ளைகளுக்கு எந்தவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை தீர்ப்பதற்கு நீங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். என்ன பிரச்சனை உண்டானாலும் உங்களிடம் உதவி கேட்கலாம் என்று நம்பிக்கையை நீங்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
முன்னுதாரணமாக இருக்க வேண்டும்:
உங்கள் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது எனில் முதலில் அதை உங்களிடமிருந்து துவங்கவேண்டும். உதாரணத்திற்கு உணவு உட்கொள்ளும் போது உங்களது போனை அனைத்து விடுவதும், நீங்கள் எவ்வாறு மொபைல் போனை குறைவாக பயன்படுத்துகிறீர்களா அது போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பதும் ஒரு நல்ல பழக்கமாக அமையும்.
சமூக வலைத்தளங்களுக்கு எல்லை வகுக்க வேண்டும்:
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு என சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துமாறு செய்யலாம். முதலில் அவர்கள் இதை கடினமாக உணர்ந்தாலும் போகப்போக இதன் நன்மையை புரிந்து கொண்டு அவர்களும் இதற்கு பழக்கப்பட்டு விடுவார்கள்.
சமூக வலைத்தளங்களைப் பற்றி பேசுங்கள்:
பிள்ளைகளிடம் சமூக வலைத்தளங்களை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மை தீமைகளை பற்றியும் பேச வேண்டும். எதனால் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பிடிக்கிறது எனவும், அதனால அவர்கள் என்ன விதமான உணர்வை பெறுகிறார்கள் என்பதையும் பேசி அவர்களை உணர வைக்க வேண்டும்.
சமூக வலைத்தள வழிகாட்டுதல்களில் பின்பற்ற வேண்டும்:
சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு இருந்தால் தான் அதனை பயன்படுத்த முடியும். எனவே உங்கள் பிள்ளைகள் அவர்களது வயதுக்கு ஏற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
SOURCE;news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments