
கடந்த காலங்களில் இனவாதச் சக்திகளினால் எமது தனியார் சட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று நிலைமை மாறி எமது சமூகத்தைச் சேர்ந்த, மேற்கத்திய சித்தாந்தங்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட சில பெண்நிலைவாத அமைப்புகளாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சில அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களாலும் அதே அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது எமது துரதிஷ்டமே!
இவர்களே இன்று எமது சமூகத்தின் முகங்களாக அரசுக்குக் காட்டப்படுகின்றனர்.
எனவே முஸ்லிம்களாகிய நாம் சமூகமாக ஒன்றிணைந்து எம் முன்னே உள்ள இந்தச் சவாலை முறையடிக்க வேண்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களிடம் கையெழுத்துச் சேகரிக்கும் முயற்சி ஒன்று பாதுகாப்புப் பிரிவின் அனுமதியுடன் கடந்த வாரம் 30/12/ 2022 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13/1/2023 வெள்ளிக்கிழமை வரை தொடரவிருக்கும் இம்முயற்சிக்குத் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எமது எதிர்கால சந்ததிகளையும் பாதுகாக்க நாம் இடும் கையொப்பங்கள் எமது சதகத்துல் ஜாரியாவாகட்டும்.
எமது உரிமைகளை பாதுகாக்க சமூகமாக ஒன்றிணைவோம்!
Sri Lanka Sharia Council
#StrengthenMMDA
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம் கையெழுத்து சேகரிக்கும் வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக, நேற்றைய தினம் (6/1/2023-வெள்ளிக்கிழமை) இலங்கையில் பல பகுதிகளிலும் ஜும்மா தொழுகைக்கு பின் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டார்கள்.


மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments