ஐபோன் ஆசை... ரூ. 46 ஆயிரம் பணம் இல்லை... இதற்காக கொடூர கொலையா - அதிர்ச்சி சம்பவம்

ஐபோன் ஆசை... ரூ. 46 ஆயிரம் பணம் இல்லை... இதற்காக கொடூர கொலையா - அதிர்ச்சி சம்பவம்


Murder For IPhone: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அர்சிகெரே பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனை வாங்க பணம் இல்லாததால் ஒருவர்,  டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொன்றதாக சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்தவரும் ஒரு டெலிவர் ஏஜென்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக இருக்கும் ஹேமந்த் தத்தா (20), ஃப்ளிப்கார்ட் டெலிவரி ஏஜென்ட் ஹேமந்த் நாயக்கின் (23) உடலை ஒரு சாக்குப்பையில் போட்டு, வீட்டில் மறைத்து வைத்து, மூன்று நாள்களுக்கு பின் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த சாக்குப்பைக்கு அவர் தீ வைத்ததாக தீவைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து ஹசான் மாவட்ட காவல் கண்காணிப்பாலறான ஹரிராம் சங்கர் கூறுகையில்,"பிப். 11ஆம் தேதி காலை அஞ்சேகோபாலு பாலம் அருகே உள்ள லட்சுமிபுரத்தின் ரயில்வே தண்டவாளம் அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அது கடந்த பிப். 7ஆம் தேதி காணாமல் போன ஹேமந்த் நாயக் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து தத்தா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஐபோனை ஆர்டர் செய்திருப்பது தெரிய வந்தது. புதிய ஐபோன் வாங்கினால், கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் கிடையாது. ஆனால் செகண்ட் ஹோண்ட் போனுக்கு, கேஷ் ஆன் டெலிவரிக்கான ஆப்ஷன் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.46 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம்.

கொலை செய்த ஹேமந்த் தத்தாவிடம் போனுக்கு கொடுக்க பணம் இல்லை. அதனால், டெலிவரி செய்ய வந்த பையனை பணம் தருவதாகக் கூறி, வீட்டில் இருக்கும்படி கூறியுள்ளார். பின்னர் தத்தா அவரை கத்தியால் கொல்ல திட்டமிட்டுள்ளார். நாயக் போனை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், தத்தா நாயக்கை தாக்கியுள்ளார். அவரது தொண்டையில் கத்தியால் குத்தி கொன்றார்.

தத்தா உடலை மூன்று நாட்கள் கழிவறைக்குள் சாக்குப் பையில் வைத்திருந்தார். பிப்ரவரி 10ஆம் தேதி, தத்தா சடலத்தை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று, ரயில்வே பாலம் அருகே வீசிவிட்டு, மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். 

இது எங்களுக்கு மிகவும் சவாலான வழக்காக இருந்தது. ஏனென்றால் கொலைக்கான எந்த நோக்கமும் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான பகையோ அல்லது குற்றப் பின்னணியோ இல்லை. பணம் கொடுக்காமல் ஐபோன் எடுப்பதற்காக மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளது" என்றார். 
zeenews



 



Post a Comment

Previous Post Next Post