"வேலை நேரம் முடிந்தது.. இனி கணினி வேலை செய்யாது"- ஊழியர் நலன் காக்கும் நிறுவனம்

"வேலை நேரம் முடிந்தது.. இனி கணினி வேலை செய்யாது"- ஊழியர் நலன் காக்கும் நிறுவனம்

நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க முடியவில்லையா?

அதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளது இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம்.

ஊழியர்கள் வேலைநேரத்துக்கு அப்பாலும் தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க எண்ணுகிறது மத்தியப் பிரதேசத்திலிருக்கும் Softgrid Computers நிறுவனம்.

வேலைநேரம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்குமுன் "தயவுசெய்து வீட்டுக்குச் செல்லவும்" என்ற அறிவிப்பு கணினித் திரையில் வரும்.

வேலைநேரம் முடிந்ததும் கணினி தானாகவே நின்றுபோய்விடும்.

முதலில் அதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஊழியர்கள் பிறகு பாராட்டத் தொடங்கினர்.

வேலை, வாழ்க்கைச் சமநிலை முக்கியம்; குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருந்தால்தான் வேலையும் சிறப்பாக இருக்கும் என்று நிர்வாகம் நம்புகிறது.

நிறுவனத்தில் சுமார் 40 பேர் பணிபுரிகின்றனர்.

இந்த நடைமுறையால் அவர்கள் நன்றாக உறங்குவதாகவும் அதிக முனைப்புடன் செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.

mediacorp



 



Post a Comment

Previous Post Next Post