பூமியை விட்டு தொலை தூரத்திற்கு விலகிச் சென்ற நிலா.. ஆபத்து ஏற்படுமா?.. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

பூமியை விட்டு தொலை தூரத்திற்கு விலகிச் சென்ற நிலா.. ஆபத்து ஏற்படுமா?.. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

ஒரு கிரகத்தை சுற்றி வரும் பொருளுக்கு விஞ்ஞான உலகு கோள் எனப் பெயரிட்டுள்ளது. அவ்வாறு பூமியை சுற்றி வரும் இயற்கையான கோள் என்றால் அது நிலவு மட்டுமே. பூமிக்கு ஒரு நிலா இருப்பது போலவே, மற்ற கிரகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிலாக்கள் உள்ளன. பூமி, சூரியன், நிலவு ஆகியவற்றின் இயக்கங்களே காலத்திற்கு ஏற்ப பூமியின் பருவ நிலை மாறுதல்களை தட்பவெட்ப சூழலை தக்க வைக்கிறது.

ஈர்ப்பு விசைக் காரணமாகவே பூமி மற்றும் நிலா நிலையான தூரத்தில் மையம் கொண்டு சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இந்த சூழலில் தான் நாசா விஞ்ஞானிகளின் ஆய்வு புதிய தகவல்களை தந்துள்ளன. இந்த தகவல்கள் பல ஐயங்களையும் உருவாக்கியுள்ளன. ஆய்வு தகவலின்படி, நிலா தற்போது பூமியில் இருந்து தொடர்ந்து விலகி செல்வதாகவும், ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் என்ற அளவில் விலகுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தூரம் சுமார் 3.84 லட்சம் கிமீ என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த இடைவெளி மெல்ல அதிகரித்துக்கொண்டு போவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது. ஆண்டுக்கு 3.8 செமீ என்ற விகிதத்தில் சுமார் 60,000 கிமீ தூரம் தற்போது நிலவு பூமியை விட விலகி சென்றதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் அதாவது 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய தொலைவை விட 60,000 கி.மீ நெருக்கமாக பூமி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி மற்றும் நிலவு ஒரு குறிப்பிட்ட தொலைவை மையமாகக் கொண்டு ஒரே அச்சில் சுழல்வதை மிலன்கோவிச் சுழற்சி என்று அழைக்கிறோம். இந்த மிலன்கோவிச் சுழற்சியை மையமாகக் கொண்டு தான் பூமிக்கு கிடைக்கும் சூரிய ஒளி, வெப்பம் ஆகியவை தீர்மானிக்கப்பட்டு, பூமியில் கால நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, பூமியில் நிலவும் குளிர், வெப்ப பருவங்கள் நிலத்தின் தன்மைகள் உள்ளிட்ட அடிப்படைகள் அனைத்தும் இந்த மின்கோவிச் சுழற்சியின் தாக்கத்தால் நடைபெறுகிறது. பூமியில் இருந்து நிலவு விலகி செல்வதற்கும் இந்த மிலன்கோவிச் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பூமியின் இயக்கத்தில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா, அபாயமான சூழல் உருவாகுமா என்ற கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.

news18



 



Post a Comment

Previous Post Next Post