ராஜகுமாரியின் சுயம்வரம்-18

ராஜகுமாரியின் சுயம்வரம்-18

"பாட்டி பாட்டி" என்று கூப்பிட்டாள் பாட்டியோட செல்லப் பேத்தி ஞானி.

"என்னமா" என்று பாட்டி கேட்டதும் "நாம் போகும் ஆலயத்தில் என்ன விசேஷம் என்று உங்களுக்குத் தெரியுமா? பாட்டி" என்றாள் 

"அட ஆமாம்  மாமி நானும் கேட்க நினைத்தேன்  ஆனா மறந்துட்டேன்" என்று இழுத்தாள் சின்ன மருமகள்.

 உடனே அவ புருசன் சொன்னான் "நீ நினைத்ததும் கேட்டு இருந்தால் தான்டி அதிசயம்  மறதி உனக்கு புதிசா" எனக் கூறி அவளை வம்புக்கு இழுத்தான் 

"இஞ்சாருங்க ச்சும்மா .. என்னோடு மல்லுக் கட்டாம வாங்க சரியா" என்று புருசனை அதட்டினாள். 

"இவர்களுக்கு இதே வேலையாச்சு எங்க போனாலும்" என்று  மூத்த மகன் கூறவே,முஸ்தபா சிரித்துக் கொண்டே சொன்னான் "ஏன்டா மச்சி தங்கச்சியோடு நீ சுரண்டி விளையாட இதுவா நேரம் மூடிட்டு வா மச்சி அவங்க ஏதோ பேசட்டும்" என்றவன் பாட்டியிடம் கூறினான். "நீங்க சொல்லுங்க பெரியம்மா அதை நானும் கேட்கின்றேன்" என்று. 

"ஆமாம் பாட்டி சொல்லுங்க" என்றாள் ஞானி.

"சரிம்மா செல்லம்" என்று கூறி பாட்டி பேத்தியோட நாடியைத் தடவி விட்டு சொன்னார் 

"அந்தக் கோயில் என் தாத்தா காலம் தான் உருவாச்சாம்.  முதல் முதல் பெரிய நாவல் மரத்தடியில் ஒரு வேல் வைத்து வணங்கி வந்தார்களாம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் குடும்பங்கள் . அப்போது ஒவ்வொருவரும் வாரத்தில் ஓர் நாள் பூசை செய்வார்களாம் .என்னோட அப்பா  தவறாமல் போய் விடுவாராம் பொங்கல் வாங்கிச் சாப்பிட..."

" அப்போ கொல்லுத் தாத்தா பொங்கல் சாப்பிட மட்டும் தான் போவாரா.. சாமி கும்பிட மாட்டாரா பாட்டி சீ முன்பே தெரிந்து இருந்தால் அவரிடமே கேட்டு இருக்கலாம்" என்றான் உதயன்.  

"அடேய் அப்போ என் அப்பாவே உன்னைப் போல் படிக்கும் பிள்ளையாம் டா// இவனொருத்தன்" என்றார் பாட்டி.  .

"ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானதைச் சொல்லி வேண்டுதல் வைப்பார்களாம். என்ன ஒரு அதிசயம்  பெரும்பாலும்  அவை நிறைவேறி விடுமாம்  மக்கள் தங்களின் சந்தோசத்தில் வேண்டியது போல் ஆலயத்தை சிறுக சிறுக. விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்களாம். அப்போது தான் இந்தியா இருந்து வந்த ஒரு கோடிஸ்வரன் இந்த ஆலயத்தை நான் பிரமாண்டமாகக் கட்டித் தருகிறேன்  .நீங்கள் கூறுவது போல் சக்தி மிக்க வேலவன் என்றால்  இங்கு ஒரு ஆடைத் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டு உள்ளேன் அதை நிறைவேற்றி தந்தால் நான் சொன்னதைச் செய்வேன் என்று கூறி சென்றானாம்.

ஆறு மாதம் சென்ற பின் அவன் வந்து ஊர் மக்களை அழைத்து தனக்குத் தொழிற்சாலை நடத்த அனுமதி கிடைத்ததாகவும் முதல் தயாரிப்பில் வரும் இலாபத்தில் பாதியை ஆலயப் பணிக்குத் தருவதாகவும் கூறிச் சென்றானாம்.

 என்ன ஒரு அதிசயம்  இரு மாதத்திலே ஆலய வேலை ஆரம்பித்து விட்டதாம். அது மட்டும் இல்லை பல. ஊர் மக்களும் வேலவனைப் பார்த்து பிராத்திக்க வந்து போக ஆரம்பித்தார்களாம் .

அப்போ இருந்து வேலவன் புகழும் ஆலய விருத்தியும் இன்று வரை தொடர்கிறது.

 அயல் நாட்டு மக்களை நாளை பாருங்க. திரண்டு நிற்பார்கள். வேலவனை தொழ வினை அனைத்தும் விலகி விடும் முன் வாசலிலே தொந்தி வினாயகர் தான் இருப்பார்"  பாட்டியின் வாரலாறுக் கதை முடியும் போதே தண்ணீர்ப்பந்தல்  தேன் பூந்திக் கடை என்று கண்ணில் தென் படத் தொடங்கியது 

"அம்மா நாம் வந்து விட்டோமா" என்று ஞானி தாயைக் கேட்க "ஆமாம் நாம் இப்போ மாமா வீட்டுக்குப் போய் குளிச்சு விட்டுத் தான் கோயிலுக்குப் போறோம் சரியா" என்றாள்.

ஒரு வழியா மூத்த மருமகளின் தாய் மாமன் வீட்டு முன்பாக  வேனைகொண்டு நிறுத்தி விட்டான் முஸ்தபா.

"நன்றிடா முஸ்தபா" என்றார் பாட்டி.  

"என்ன பெரியம்மா  நன்றி எல்லாம் கூறுவது  அதை விட்டுட்டு  ஒரு டீ போட சொல்லுங்க யாராவது  எனக்கு தலை வலிக்குது ரோட்டுப் பார்த்து" என்றான்  முஸ்தபா.. 
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post