பெண்ணே நீ அழாதே
ஏன் அழுகிறாய்
உன் அழுகைதான் உன்பலவீனம்
அழாதே பெண்ணே!
உன் அழுகைதான்
உன் தோல்வியின் முதற் படி
உன் அழுகையைப் பார்த்து
பலவீனம் வீரியமடையும்
கயவெரெல்லாம் உன்
அழுகைக்காக காத்திருந்து
ஆனந்தம் கொள்வர்
அழாதே பெண்ணே
அழாதே உன் கண்ணீரை
முற்றுப் பெறு உன்
பலவீனம் விட்டொழியும்
உன் கண்ணீரைத் துடைக்க
உன் இருகைகளும் போதும்
உன் பத்து விரல்களால்
சுட்டு விரலால் மட்டும்
துடைத்துப் பார் வீரம் பொங்கும்.
இறைவன் தந்த நம்பிக்கையுடன்
உன் இரு கை சேர்த்து
இறை பக்தியை நாடி
உடன் பட்டு எழுந்து வா
அழாதே பெண்ணே அழாதே !
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
துணிந்தெழு கொதித்தெழு
இஸ்லாமியப் பெண்ணின் வரையறைக்குள்
நின்றும் அகன்று விடாதே
பாரினில் இவள் பெண்தானே
என்று அலட்சியம் கொள்வோரை
காலில் போட்டு மிதிக்கவும்
தயங்காதே உன் அறிவின்
ஆற்றலாய் இஸ்லாம் தந்த
பெண்ணுரிமைச் சட்டம்
சமவுரிமை என்றே மறவாதே!
அழாதே பெண்ணே
நீ அழாதே காவியம்
படைக்க வந்த மங்கையர்களில்
ஒருத்தி நீ இந்த தூசுகளுக்கெல்லாம்
அஞ்சலாமோ?
வேண்டும் வேண்டும்
அநியாயங்கெளுக்கெதிரான
கோபமும் வேண்டும்
கயவர்கள் காமர்களால்
உன் கற்பும் அழகும்
அழிக்க நேரிடும் முன்
சினந்தெழுவீர மங்கையாக
அகத்தின் அழகும் ஒரு
கோபமே பெண்ணே
அழாதே பெண்ணே நீ அழாதே.
சேகு பரீகா
ஏறாவூர் 02
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments