ஒரே ஒரு புகார்.. சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் மீது நடவடிக்கை : அதிரடி காட்டிய காங்கிரஸ் MP!

ஒரே ஒரு புகார்.. சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் மீது நடவடிக்கை : அதிரடி காட்டிய காங்கிரஸ் MP!

பா.ஜ.க ஆதரவாளரான யோகா சாமியார் ராம்தேவ், பதஞ்சலி எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தை பா.ஜ.க அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே!

கொரோனா அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி CORONIL என்ற ஒரு மருந்தை அறிமுகம் செய்தார் ராம்தேவ். பின்னர் அவை கொரோனாவை எதிர்க்காது என மருத்துவர்கள் கூறி வந்தநிலையில் சாமியார் ராம்தேவ் மீது பல்வேறு புகார்கள் குவிந்தது.

குறிப்பாக சாமியார் ராம்தேவ் தனது நிறுவனத்தில் தயாரிக்கும் பொருட்களுக்கு விதிமுறையை மீறி விளம்பரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு கூட, கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபு ஒன்றிய அரசின் மத்திய ஆயூஷ் துறைக்கு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், சாமியார் ராம்தேவ் தனது மருந்துகளில் சக்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இயத பிரச்சனை உள்ளிட்ட சில நோய்களுக்கு தீர்வு காண முடியும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இது மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954க்கு புறம்பானதாகும். எனவே அவற்றிற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியுறுத்தார். ஆனால் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவர் சட்ட விதியை சரியாக குறிப்பிடவில்லை எனக் காரணம் கூறி மனுவை நிராகரித்தது. முறையான விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதஞ்சலி நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய ஆயூஷ் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் “மருந்துகள் மற்றும் அற்புத நிவாரணிகள் தடை சட்டம் 1954 ஐ மீறிய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தராகண்ட் அரசின் உரிமம் வழங்கும் ஆணையத்துக்கு உத்தடவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post