அத்தியாயம்-1
காதல்
காதல்
1) மணவாழ்க்கை சிறக்க மணமக்களின் இதயத்தில் மணம்வீச வேண்டுமே காதல்.
2) அமுதுசுரக்க ஆற்றல் பெருக இன்பமொளிர
வலுசேர்க்குமே வல்ல காதல்.
3) மனங்களின் சங்கமம் மாசறுபொன்னாக மானுடம் தழைக்க வித்திடுமே காதல்.
4) மலர்மணம் காற்றின் திசைவழி மட்டுமே ; காதலின்குணம் மானுடத்தினைம் புலனுடனே!!
5) மனைவியை நேசித்து மனையறம் காத்திடுவோம் செழிப்புடன்வாழ விதைத்திடு காதலையே!!
6)வாழ்க்கைத் தோழியான வான்பயன் மனையாளைப் போற்றிடுவோம் எந்நாளும்நற் காதலாலே!!
7)வாழ்தலுக்கும் சாதலுக்கும் அடிப்படை ஆதாரமாய் சங்கமிக்கும் அச்சாணியே காதல்.
8) அன்பான வாழ்க்கை வையத்து மாந்தர்க்கு ஊற்றுக் கண்ணாகும் காதல்.
9) இல்லறத்தின் பாங்கறிந்து உவப்புடனே மானுடம் சீர்பெறவே ஊடுபொருளாமே காதல்.
10) கத்துக்குட்டி கவிஞனையும் கிறுக்கனாக்கி அலைகலித்துச் சித்தனாக்கும் மெய்மைக் காதல்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு ஹாஜியார்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... மேன்மேலும் தொடரட்டும் உங்கள் அறப்பணி. வாழ்த்துக்களுடன், உங்கள் திருக்குறள் முரசு முனைவர் மு.க.அன்வர்பாட்சா 💖💖🙏
ReplyDelete