புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 153

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 153


கல்லடிவாரத்தில் எங்கு தேடியும் யோகியார் இல்லாததால், செரோக்கி  வேரேணியில் ஏறி  பெரியகல் வந்து சேர்ந்தான்!

இப்பொழுது கிராமத்தவர்கள்  தமக்குள்ளேயே எதை எதையோவெல்லாமோ பேசிக் கொண்டவர்களாக,  ஆளுக்காள் கருத்து முன்வைக்கலாயினர்.

யோகியார் பெரியகல்லிலிருந்து விழுவதற்கு சில காலங்களுக்கு முன்னர், மங்குவின் பாட்டன், அவரது முதுமைக் காலத்தின்போது  பெரியகல்லிலிருந்து கல்லடிவாரத்தில் விழுந்துள்ளார்.

பெரியகல்லிலிருந்து விழுபவர் இறந்துவிடுவர் என்று காலாகாலமாக வனவாசிகள் நம்பிக்கை கொண்டிருந்ததால் அவரது வாழ்வு முற்றுப்பெற்றுவிட்டது என்றே அவர்கள் நினைத்தனர்.

கல்லடிவாறத்தில் விழுந்த அவர் உயிர்தப்பியுள்ளார்; தன்னைக் காப்பாற்றும்படி பல நாட்களாகக் கூக்குரல் எழுப்பியுள்ளார்.

அவர் விழுந்த பின்னர், பல நாட்களாக கல்லடிவாரத்திலிருந்து வந்த கூக்குரல் 'பேய்' அல்லது மங்குவின்  பாட்டனின் 'ஆவி' என்று வனவாசிகள் நம்பியதால்,  பல காலமாக பெரியகல் பக்கம்  எவரும்  போவதில்லை!

அண்மைக் காலமாக  ரங்கு 'தெலிஜை' இறக்குவதற்காக பெரியகல் பக்கமாக வந்து போனதும், செரோக்கியும் அவனது தந்தையும்  எச்சங்கள், மூலிகைகள் தேடி வனத்துக்குள் செல்லும்போதும் இளைப்பாறிச் செல்லும் இடமாகப் பெரியகல்லைப் பயன்படுத்திக் கொண்டதும், தனது காதலி ரெங்க்மாவுடன் செரோக்கி அடிக்கடி கல்லுக்கு வந்து போனதையும் தொடர்ந்து, கிராமத்து மக்களுக்குப் 'பேய்ப்பயம்' விட்டுப்போனது!

எங்கு தேடியும்  யோகியார்  இல்லாததால், மறுபடியும் குகைப்பக்கம்போய் அந்தப் பகுதிகளில் தேடலாம் என்று வந்தபோது, குகைக்குள் அவர் தியானத்தில் ஈடுபட்டிருப்பதையும், அவருக்குப் பக்கத்தில் சகாக்களான மந்திகள் அமைதியாக வீற்றிருந்ததையும்  கண்டபோது, அனைவரும்  திக்குமுக்காடிப் போய்விட்டனர்.

'எங்கு தேடியும் அவர் கண்களில் படவில்லையே? அவர் எங்குதான் சென்றிருப்பார்?  யோகபலத்தால் அவருக்கு மறைந்து வாழும் சக்திகள்  ஏதும்  உள்ளதோ?'  இவ்வாறாக செரோக்கி யோசிக்கலானான்!
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post