ராஜகுமாரியின் சுயம்வரம்-19

ராஜகுமாரியின் சுயம்வரம்-19

சொன்ன கையோடு கொல்லப் பக்கம் நடந்தான். போனவன் வியப்பில் ஆழ்ந்து விட்டான்.

இயற்கையின் அழகிலும் அதன் செழிப்பான வளர்ச்சி கண்டும் வீசிடும் காற்றில் கலந்து வந்த நறுமணமும் அவனை ஏதேதோ கற்பனைக்கு கொண்டு சென்றது.

அட இத்தனை சின்ன நிலத்தில் எத்தனை செடிகளா? ஒரு மூலிகை  கடையே இங்கு இருக்கின்றதே. எத்தனை விதமான நோய் தீர்க்கும் மருத்துவ இலைகள் இவை. ஆஹா நான் புத்தகத்தில் படித்த பாம்புக்கடி விசம் முறிக்கும் மூலிகை தானே இது/ ஆமாம் இதேதான் இதன் பெயர் கூட அவுரிநெல்லி  என்று தானே சொல்வார்கள்.  முடிதும்பை தலை வலி மூலிகை  நண்ணாரி பல் வலி மூலிகை  முடங்கத்தான் மூட்டு வலி மூலிகை  வாதராணிக் கீரை கால் கை கொடச்சல் கீரை எரிக்கிலை பாத வெடிப்பு மூலிகை  கரு நொஞ்சி வெண் நொச்சி சலி தீர்க்கும் மூலிகை  அய்யோ அய்யோ பேர் அறியா மூலிகைச் செடியெல்லாம் சிரித்து நிக்கின்றதே என்ன ஒரு புத்துணர்ச்சி இந்த இடத்தில் வந்ததுமே என்று தனக்குள்ளே பேசிக் கொண்டே அப்படியே மறு பக்கமாகப் பார்வையைத் திருப்பினான்.

மெய் மறக்கச் செய்தது வண்ணப் பூக்களின் கொள்ளை அழகு. கொத்துக் கொத்தாய் முல்லை சாம்மந்தி சங்குப் பூ அலறியிலே பல வண்ணம் மல்லிகை பல இனம் ம்ம் செம்மரத்தி அது அளவற்ற வண்ணங்களில் மொத்தத்தில்  ஒரு பூக் கடைக்குள் நுழைந்தது போல் மனதில் தோன்றியது.

அப்படி பார்வையை சுற்றி சுற்றி ஓட விட்டதிலே தலை வலியே தெரியாமல் போச்சு முஸ்தபாக்கு. என்ன அருமையான வாழ்வு கிராமத்து வாழ்க்கை  என நினைத்துக் கொண்டு இருக்கும்  அப்போது உதயன் குரல் கேட்டது .

"முஸ்தபா மாமா வாங்க அம்மா தேநீர் குடிக்க அழைக்கின்றார்" என்றான்.

நகர மனம் இன்றி நகர்ந்தான் முஸ்தபா.   அவனைக் கண்ட. வீட்டார் வாங்க என்று அழைத்து பன் பாய் மேலேஅமர விட்டனர்.

சற்று நேரத்தில்  பனம் பானியில் செய்த பலகாரம் அதோடு சேர்த்து வீட்டுத் தோட்டத்தில் எடுத்த சோளம் கச்சான் மரவள்ளி  பொரியல் என்று அனைத்தும் கொண்டு வந்து வைத்து விட்டு பொன்னவரைப் பூ தேநீரும் கொண்டு கொடுத்து சொன்னார். "அந்த வீட்டு சின்ன ஆத்தா ராக்காயி சாப்பிடு தம்பி எல்லாமே எங்க நிலத்தில் கிடைத்தவை தான். சுவையாக இருக்கும் சாப்பிடு. அதோடு இந்த டி தலை வலி சுக்கர் நோய்கு எல்லாம் நல்ல தீர்வு தரும். அந்த பக்கமாக இருக்கு மரம் இப்போதுதான் பறிச்சுத்து வந்து கொதிக்க வைத்தேன். குடி தம்பி} என புன்னகையோடு கூறினார்.  

 உண்மையில் முஸ்தபா இவர்கள் மீது மனதளவில் மரியாதையை பதிய விட்டு விட்டான். அந்த நொடியே அந்த ராக்காயி அண்டி சொன்னது போல் சுவையாகவே இருந்தது. அனைத்தும். முஸ்தபா ரொம்ப ரொம்ப. மிஸ் பண்ணினான் கிராமத்தை.
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post