வாழ்வியல் குரல் -(சிந்தனைத் தத்துவங்கள்) "மனம்"-2

வாழ்வியல் குரல் -(சிந்தனைத் தத்துவங்கள்) "மனம்"-2


அத்தியாயம்-2
மனம்
            
1) வளங்கள்சொரியும் ஊற்றுக்கண் மனமே 
சொரிவதிலும் நீ சுகத்தை வைத்தாய்! வாழி 

2) மனமேஉன் பயணம் செப்பமுறாது போனால் மானுட வாழ்வே பாழ்பட்டுப் போகுமே

3) வண்ணங்கள் கலந்தால் நல்லோவியமாகும் நல்லெண்ணங்கள் மிளிர்ந்தால் அதுகாவியமாகும் மனமே!

4)மனமே, நீ கைகொடுத்தால் வையகமும் வசப்படுமே!
நீ பிணங்கின் வாழ்வே நரகமாகுமே! 

5) சிலிர்த்திடும் சிந்தனைகளுக்கு உணர்ச்சியில்லை
எண்ணியதை ஈடேற்றும் மனமே காண்.

6)மனமே கொட்டடா திருக்குறள் முரசை வையம் பாலித்திட வேண்டும் என்றே

7) பிரபஞ்ச மனமே பூமித்தாய் அமைதியுறவே பூத்திட மாட்டாயோ புதுஅவதாரம் ?

8) கன்னியரும் காளையரும்  தரங்கெட்டுப் போவதற்கும், தரணியில் புகழ் பெறவும் நீயன்றோ வித்தாவாய் மனமே!

9)மனமே நாம் மனிதர் என்பதனால் நம்பல கை இணைந்தால் உலகை வென்றிடலாம் அன்றோ?

10)மனமே எண்ணியவாறு உருமாறும் வல்லமை உன்னிடம் உள்ளதால் நல்லனவே எண்ணிடுக!
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post