
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை சேர்ந்த அலெக்சி மொஸ்கலியோவ் என்பவரின் 12 வயது மகள் மாஷா, தனது பள்ளிக்கூடத்தில் ஓவியம் வரையும் பயிற்சியின்போது உக்ரைனில் தாய், மகள் மீது ரஷ்யா ஏவுகணை மழை பொழிவது போல போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியம் ஒன்றை வரைந்தார்.
இது குறித்து பள்ளி அதிபர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மாஷாவின் தந்தை அலெக்சியின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் அவரும் போருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அலெக்சியை வீட்டு காவலில் வைத்த காவல்துறையினர் மகளை அவரிடம் இருந்து பிரித்து, காப்பகத்தில் சேர்த்தனர். இந்த விவகாரம் ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தையும், மகளையும் ஒண்றினைக்கும் படி பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன.
ஆனால் அதை பொருட்படுத்தாத காவல்துறையினர் அலெக்சி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாக கூறி அலெக்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments