சி சின்பிங் சீன அதிபராக 3ஆவது தவணைக் காலத்துக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வு

சி சின்பிங் சீன அதிபராக 3ஆவது தவணைக் காலத்துக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வு

திரு. சி சின்பிங் சீன அதிபராக 3ஆவது தவணைக் காலத்துக்கு அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குத் திரு. சி சீனாவின் அதிபராகத் தொடர்வார்.

நேற்று (9 மார்ச்) நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அது முடிவானது.

ஒருவர் இரு தவணைக் காலத்திற்கு மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற விதிமுறை 2018ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

சீனாவின் வரலாற்றில் 3ஆவது தவணைக் காலத்திற்கு அதிபராகத் தொடரும் முதல் தலைவர் திரு. சி.

சீனாவின் முன்னாள் அதிபர் மா சே துங்கை அடுத்து அந்நாட்டின் ஆகச் சக்திவாய்ந்த தலைவராக 69 வயது திரு. சி கருதப்படுகிறார்.

mediacorp
ஆதாரம் : CNA/gs(mi)



 



Post a Comment

Previous Post Next Post