ஆக நீளமான நாக்கைக் கொண்ட நாய்... உலகச் சாதனை

ஆக நீளமான நாக்கைக் கொண்ட நாய்... உலகச் சாதனை

உலகில் ஆக நீளமான நாக்கைக் கொண்ட நாய் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிஸ்பீ (Bisbee) கின்னஸ் சாதனை புரிந்திருக்கின்றது.

3 வயதாகும் அந்த English setter வகை நாயின் நாக்கு 9.49 சென்டிமீட்டர் என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

அதன் படம் ஒன்றைத் தமது சகோதரிக்கும் தந்தைக்கும் அனுப்பியபோது அவர்களில் ஒருவர் பிஸ்பீயின் நாக்கு உலகச் சாதனையாக இருக்கக்கூடும் என்று சொன்னதாக எரிக்கா ஜான்சன் (Ericka Johnson) குறிப்பிட்டார்.

எரிக்கா, ஜே ஜான்சன் தம்பதியுடன் பிஸ்பீ அரிஸோனா மாநிலத்தில் வசித்து வருகிறது.

இதற்கு முன்னர் ஆக நீளமான நாக்கு கொண்ட நாய் எனும் உலகச் சாதனை புரிந்திருந்தது மோச்சி (Mochi) என்ற நாய்.

அதன் நாக்கு 18.58 சென்டிமீட்டர் நீளம்!

அமெரிக்காவின் நார்த் டகோடா மாநிலத்தில் வசித்து வந்த அது 2021ஆம் ஆண்டு காலமானது என்று BBC சொன்னது.
mediacorp

ஆதாரம் : Others


 



Post a Comment

Previous Post Next Post