Ticker

6/recent/ticker-posts

37 000 இற்கும் அதிகமான கையொப்பங்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சரிடம் கையளிப்பு


முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தங்கள் மார்க்க வழிகாட்டலுக்கு அமைவாக மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 37 000 இற்கும் அதிகமான கையொப்பங்கள் திரட்டப்பட்டு இன்று (10 மார்ச் 2023) நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களிடம் நீதியமைச்சில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. 

இந்த முயற்சியினை ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் மற்றும் #strengthenMMDA அமைப்பு ஆகியன இணைந்து செயற்படுத்தியுள்ளது. 

அத்தோடு மார்க்கத்திற்கு அமைவாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டல் அறிக்கையும் ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சிலினால் நீதி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டது.





 



Post a Comment

0 Comments