Ticker

6/recent/ticker-posts

மலேசியாவில் கனத்த மழை, கடும் வெள்ளம் - 4 பேர் மரணம்


மலேசியாவின் தென் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கிக் குறைந்தது நால்வர் மாண்டனர்.

ஜொகூர் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் சுமார் 40,000 பேர் தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளது.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் மலேசியாவின் வழக்கமான பருவமழைக் காலம்.

இந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால் பலரும் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்கு உதவ அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர்.
mediacorp
-AFP



 



Post a Comment

0 Comments