Ticker

6/recent/ticker-posts

மெஸ்ஸி உயிருக்கு அச்சுறுத்தல்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் மெஸ்ஸியின் குடும்பத்திற்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi)  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, லியோனல் மெஸ்ஸியின் மனைவியின் குடும்பத்துக்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் வியாழக்கிழமை அதிகாலை இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதேவேளை, தாக்குதல் நடத்தியவர்கள் “மெஸ்ஸி, உனக்காகக் தான் காத்திருக்கிறோம். ஜாவ்கின் ஒரு நார்கோ, அவர் உன்னை பாதுகாக்க மாட்டார்” என்றும் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்.

மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோவின் (Antonela Roccuzzo) குடும்பத்திற்கு சொந்தமான அந்த சூப்பர் மார்க்கெட் ரொசாரியோ நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டுகள் உலோகத் திரைகளைத் தாக்கியதாள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது



 



Post a Comment

0 Comments