பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் டெக்சஸின் வாகோ (Waco) நகரில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

பல்வேறு குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டாலும் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

உற்சாகத்தை முடக்க எதிர்ப்பாளர்கள் ஆன அனைத்தையும் செய்து தோல்வியடைந்ததாகத் திரு. டிரம்ப் கூறினார்.

மீண்டும் அதிபராக்கினால் எதிர்ப்பாளர்களின் ஆட்சியை வீழ்த்தி அமெரிக்காவை மீண்டும் சுதந்திர நாடாக்கப் போவதாகச் சொன்னார்.

நியூயார்க் பண மோசடி விசாரணை ஒரு சூனிய வலை என்று திரு. டிரம்ப் மீண்டும் கூறினார்.

ஆதரவாளர்களை உசுப்பேற்றும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

பேரணியில் 15,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் குறைவு.

அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் மூண்ட 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி வாகோவில் பேரணி இடம்பெற்றது.

திரு. டிரம்ப்பின் வலசாரி ஆதரவாளர்களுக்குச் சாதகமாகப் பேரணி நடத்தப்பட்டதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு. டிரம்ப் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது.
mediacorp



 



Post a Comment

Previous Post Next Post