Ticker

6/recent/ticker-posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தமது முன்னாள் முன்னாள் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக சாலிய பீரிஸின் தொழில்சார் கடமைகள் மற்றும் அவரது பாதுகாப்பு தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலிய பீரிஸூக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

போதைவஸ்து கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்கிரமரத்ன சார்பில் சாலிய பீரிஸ் நீதிமன்றில் முன்னிiலையாகக் கூடாது என்று கோரியே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் ஒவ்வொரு பொதுமகனுக்கும் நியாயமான விசாரணைக்கு உரிமை உண்டு. அத்துடன், தாம் விரும்பும் ஒரு சட்டத்தரணியினால்; அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும் உள்ளது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

tamilwin



 



Post a Comment

0 Comments