தாய்க்குத் தங்க மோதிரம் வாங்க அல்லும் பகலும் பணம் சேமித்த மகள்

தாய்க்குத் தங்க மோதிரம் வாங்க அல்லும் பகலும் பணம் சேமித்த மகள்

தாயாருக்குத் தங்க மோதிரம் வாங்க நினைத்தார் சீனாவைச் சேர்ந்த ஒரு சிறுமி. அதற்காக ஓராண்டுக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட அன்றாடப் பணத்தை அவர் சேமித்துவந்தார். South China Morning Post அதன் தொடர்பிலான காணொளியை வெளியிட்டது.

அதில் சிறுமி தினமும் 3 யுவான் சேமித்ததாகக் கூறினார்.

அவரின் உறவினருடன் நகைக்கடைகளுக்குச் சென்று வெவ்வேறு மோதிரங்களை அணிந்து பார்த்தார்.

பிடித்த மோதிரத்தை வாங்குவதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை.

மோதிரத்தின் விலை 1,586 யுவான். அவரிடமோ 1,350 யுவான் மட்டுமே இருந்தது.

அப்போது கடையிலுள்ள விற்பனையாளரிடம் மீதமுள்ள பணத்தைத் தினமும் 5 யுவான் என்ற முறையில் தம்மால் கொடுக்கமுடியும் என்றார் சிறுமி.

விற்பனையாளர் அதைக் கேட்டுச் சிரித்தார்.

சிறுமியின் உறவினர் எஞ்சிய பணத்தைச் செலுத்தி அவருக்கு உதவியதாக South China Morning Post தெரிவித்தது.

வீட்டுக்குச் சென்றதும் தங்க மோதிரத்தைத் தந்து தாயாருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் சிறுமி.

தாயார் மகிழ்ச்சியில் மகளை முத்தமிட்டார்.

சிறுமியின் செயலைக் கண்டு இணையவாசிகள் பலர் மனம் நெகிழ்ந்தனர்.
mediacorp



 



Post a Comment

Previous Post Next Post