குடும்ப அரசியல் கட்சிகளை முற்று முழுதாக அகற்ற வேண்டும்...ஸ்ரீ.ஐ.மு.கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹமத் சதீக்

குடும்ப அரசியல் கட்சிகளை முற்று முழுதாக அகற்ற வேண்டும்...ஸ்ரீ.ஐ.மு.கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹமத் சதீக்

வடமாகாண மீள்குடியேற்றம் மிகவும் சிறந்த முறையில் அமைந்துள்ளது  என்று  ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹமத் சதீக் ( அமீனி) அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் அற்ப அரசியலுக்காக வடமாகாண மீள்குடியேற்றம் சிறந்த முறையில் அமையவில்லை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொடுபோக்காக இருந்தார் என்று சம்பந்தமில்லாத போலி வதந்திகளை குடும்ப கட்சி ஒன்று ஊடகங்களில் பரப்பி வருவதை தான் வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார் .

உண்மையில்  முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை பொருத்தவரையில் இரவு பகலாக கஷ்டப்பட்டு அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று தனது பிரதேச மக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தான் மீள்குடி ஏற்ற அமைச்சராக இருந்த பொழுது பெற்றுக் கொடுத்தார். காணி இல்லாதவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் அரச கானிகளை பெற்றுக் கொடுத்து தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று பாராமல் அனைத்து இனங்களுக்கும்  வீடு காணிமருத்துவ வசதி வாழ்வாதாரம் போன்றவற்றை வழங்கியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் 32 வருடம் அரசியலில் இருந்து வேறு பல காரணங்களினால்  பூரணமாக மீள்குடியேற்றத்தை அமைக்க முடியாமல் போயிற்று எனினும் தன்னால் இயன்ற அளவு நூற்றுக்கு 75% மீள்குடியேற்றத்தை மிகவும் சிறப்பாக அமைத்து  செயற்படுத்தியுள்ளார்.


அதேபோல் இன்றும் வடமாகாண மக்களுக்கு குரல் கொடுத்தமையினால்  இனவாதிகளுக்கு மத்தியில் சிவப்பு முத்திரை விடப்பட்டுள்ளார்.எனவே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் எமது கட்சியான ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சிக்கும் அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் உண்மையை உரைக்க எந்த ஒரு அரசியல்வாதிக்கும் பயப்பட போவதில்லை.எனவே சமூகத்தில் மத்தியில் போலி பிரச்சினைகளை உண்டு பண்ணி மக்கள் மத்தியில் நற்பெயர் பெற முயற்சி செய்யும் சுயநல குடும்ப அரசியல் கட்சிகளை சமூகத்திலிருந்து முற்று முழுதாக அகற்ற மக்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும், ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி் கட்சி  தலைவர் மௌலவி சித்தீக் மொஹம்மத் சதீக் அமீனி தெரிவித்தார் .



 



Post a Comment

Previous Post Next Post