Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மாளிகையை ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டைக்கு மாற்றியமைக்க்கும் திட்டம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மேற்கொண்ட திட்டத்தை மீள்பரிசீலனை செய்யும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபை சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டைக்கு மாற்றியமைக்க சந்திரிகா எண்ணம் கொண்டிருந்தார்.

எனினும் பின்னர் அது முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அதன் சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி மாளிகை, ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு மாற்றப்படும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



 



Post a Comment

0 Comments