Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 3 பிள்ளைகள் உட்பட 6 பேர் மரணம்

அமெரிக்காவின் நாஷ்வில் (Nashville) நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மூவர் பிள்ளைகள்.

காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் கொல்லப்பட்டார். அவர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அந்தப் பெண் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாகத் தெரிகிறது.

பள்ளிக்கூடத்தின் விரிவான விவரம் அடங்கிய வரைபடத்தையும் அவர் வைத்திருந்ததாக CNN செய்தி நிறுவனம் கூறியது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.
mediacorp
ஆதாரம் : AGENCIES



 



Post a Comment

0 Comments