அரசியல் கண்ணோட்டம்: சண்முகா வித்தியாலயமும் முஸ்லிம் கலாச்சாரமும்

அரசியல் கண்ணோட்டம்: சண்முகா வித்தியாலயமும் முஸ்லிம் கலாச்சாரமும்


சண்முகா மகளிர் கல்லூரியில் நடந்த அநீதிக்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகள்  இலங்கை தமிழரசு கட்சி தலைமையை தொடர்பு கொண்ட பொழுது இந்த விவாகரத்தில் நீங்கள் எவரும் மூக்கை நுழைக்காமல் இருப்பதே சிறந்தது என்று  அந்தக் கட்சியின் தலைமை பதில் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது

இந்தத் தகவலை கேள்விப்பட்டதும்  முஸ்லிம் சமூகம் வியந்து போனது

தமிழரசு கட்சியின் மிக முக்கிய ஒரு உறுப்பினர் சட்டத்தரணியாக சண்முகா வித்தியாலய விவகாரத்தில்உல் நுழைத்து அநீதி இழைக்கப்பட்ட ஆசிரியை வாபஸ் வாங்க சொல்லும் பொழுது தமிழரசு கட்சியின் தலைமை மௌனம் காப்பது ஏன்?

தமிழீழ விடுதலை புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தை மீள்குடியேற்றம் செய்யும் போது மீல்குடியேற்றத்திற்கு முரண்பட்டவர்களில் சிலரும் தமிழரசு கட்சியில் இருக்கின்றார்கள்.

அன்று வரலாற்றுத் தவறை செய்து விட்டோம் என்று என்டன் பாலசிங்கம் ஐயா சொன்னதும்.இன்று தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் அன்று நடந்தது வரலாற்று தவறுதான் என்று உணர்ந்திருந்த போதிலும் கலாச்சார சீருடை விவகாரத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று பட்டு நிலையான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இடையில் கவலைக்குரிய விடயமாக மாறி உள்ளது.

இன உரிமைக்காக போராடுகின்றோம் என்ற விம்பத்தில் இருக்கும் இரு சமூகத்தின் அரசியல் தலைமைகள்  ஒரு சமூகத்தின் மத உரிமையை பறிக்கும் போது ஏன் குரல் கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது 

இன உரிமைக்காக போராடுகின்றவர்கள் இன்னொரு சமூகத்தின் மத உரிமையை பெற்றுக் கொடுக்க முன்வராத பட்சத்தில்
வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலை  என்னவாகும் என்ற கேள்வியும் முஸ்லிம் சமூகத்தில் எழுவது நியாயம் அல்லவா.

இப்படிப்பட்டவர்களை நாம் எப்படி நம்புவது.?

தங்களின் உரிமைக்காக போராடுவதை நியாயம் என்ற குரல் கொடுப்பவர்கள்.இன்னொரு சமூகம் அவர்களின் உரிமைக்காக போராடுவதற்கு எதிர்த்து நிற்பது நியாயமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளை நாம் ஒருபோதும் இந்த விடயத்தில் நியாயப் படுத்தப் போவது இல்லை.

 அவர்கள் அனைவரும்சமூக உரிமை விடயங்களில் மௌனமாக இருப்பது ஏன்?

 திருகோணமலை சண்முகா வித்யாலயத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக முதல் முதலாவது குரல் எழுப்பியவனில் நானும் ஒருவன்.

எமது அந்த எதிர்ப்புக்கு பழம் சேர்ப்பதற்காக போராடியவர்களில் சமூக சிந்தனையாளர்கள் பலர் முன்வந்தனர்.

முன் வந்த சிலர் தற்போது பின்னோக்கியும் சென்று விட்டனர்.
ஆனால் இந்தப் போராட்டம் வலிமை மிக்கதாக மாறி உள்ளது என்ற விடயத்தையும் அவதானிக்க வேண்டும்.

இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க 13 வது திருத்தத்தை அமல்படுத்துவேன் என்று ஜனாதிபதி கூறுகின்ற போது
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது ஏன்?

13 வது திருத்தத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் எமது சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியாக மாறும் நிலையை அவதானிக்கவில்லையா?

ஒரு இந்து கலாச்சார அரச பாடசாலையில் முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார உடையை அணிந்து செல்ல முடியாது என்று போராட்டம் நடத்தும் நிலைமையில் அந்த சமூகத்துடன் அரசியல் ரீதியாக எவ்வாறு ஒன்றுபட முடியும்?

13 வது திருத்தத்தின் மூலம் தமிழ் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் எதிர்க்கவில்லை.

அந்த சட்டத்தின் ஊடாக மூன்றாம் தரப்பாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்ற விடயத்திற்கு உறுதிமொழி அவசியம்.

அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு சமத்துவம் கிடைக்க உறுதிமொழி இல்லாமல் வடகிழக்கை இணைக்க ஒருபோதும் முஸ்லிம் சமூகம் உடன்பட மாட்டாது என்ற விடயத்தை இந்த பதிவின் ஊடாக தெளிவு படுத்துகின்றோம்.

வடகிழக்கு இணைப்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாக இருந்தாள் எதிர்காலத்தில் அவர்கள் அரசியலில் இருந்து தூரமாக்கப்படுவார்கள் என்ற விடயத்தையும் தெளிவுபடுத்துகின்றோம்.

இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டிற்கு அவசியமில்லை

ஆனால் இனங்களினதும் மதங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை 
நன்றி

Deshamani ,Vishva Kirthi ,Lanka putra ,
GGI Jabeen Mohamed
Reliable independent network
(RinTv) Founder  & director
Sir Lanka United front party Deputy leader


 



Post a Comment

Previous Post Next Post