புட்டின் கைது செய்யப்படும் நாட்டின் மீது ரஷ்யாவின் ஏவுகணை பாயும் - முன்னாள் அதிபர்!

புட்டின் கைது செய்யப்படும் நாட்டின் மீது ரஷ்யாவின் ஏவுகணை பாயும் - முன்னாள் அதிபர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கைது செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev) தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புட்டினுக்குக் இம்மாதம் 17 ஆம் திகதி கைதாணை பிறப்பித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புட்டின் செல்லும்போது கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சட்டரீதியான தகுதிகள் ஏதுமற்ற அமைப்பு என ரஷ்ய முன்னாள் அதிபர் மெட்வடேவ் ரஷ்ய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா, சீனா மட்டுமின்றி அமெரிக்காவும் இந்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய அதிபர் கைது செய்யப்படுவாராக இருந்தால், அது ரஷ்யாவுடனான யுத்த பிரகடனமாக கருதப்படுவதோடு அணுவாயுத வல்லரசான ரஷ்யாவின் அனைத்து வகை ஏவுகணைகளும், புட்டின் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்படுகின்றாரோ அந்நாட்டின் மீது பாயும் என மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.

ibctamil




 



Post a Comment

Previous Post Next Post