Ticker

6/recent/ticker-posts

ஒரே வீட்டில் கர்ப்பமான அம்மா,மகள், பாட்டி -வைரலாகும் புகைப்படம்


கேரளாவில் அம்மா, பாட்டி, மாமியார் ஆகிய 3 பேரும் கர்ப்பிணி பெண்ணுடன் சேர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்றைய நவீன இணையதள யுகத்தில்,எல்லோரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர். அப்படி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை, சந்தோஷமான நிகழ்வுகளை மீண்டும் நினைவுகூர உதவுகின்றன.

இப்போதெல்லாம், பிறந்தநாள்,திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, பெயர் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுப்பது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில், தற்போது, மகப்பேறு போட்டோஷூட் பிரபலமாகி வருகிறது.

அதன்படி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதில், அவரது மாமியார், அம்மா, பாட்டி என எல்லோரும் தலையணை வைத்துக்கொண்டு கர்ப்பமாக இருப்பதுபோல் மேக்கப் செய்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது வைரலாகி வருகிறது.
ibctamil




 



Post a Comment

0 Comments