உலகை உலுக்கிச் சென்றகொரோனா பரவல் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை.
மனித இனம் உலகில் எந்தெந்த மூலை முடுக்குகளில் வாழ்கின்றதோ அங்கெல்லாம் சென்று உலகம் அழியும் வரையிலான ஒரு வரலாற்றை எழுதிச் சென்றது கொரோனா வைரஸ்.
கொரோனாவால் மரணித்த அத்தனை மனித உயிர்களும் அந்தந்த நாடுகளில் அவர்களின் மார்க்க வணக்க வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
நமது இலங்கையில் மாத்திரம் கொரோனாவால் மரணித்த உடல்களுக்கு உலகம் வியக்கும் வித்தியாசமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் வாழும் மூவின மக்களில் முஸ்லிம் மக்கள் தவிர்ந்த ஏனைய இன மக்கள் இறந்து போன தங்களது உறவுகளை அவர்களின் மத அனுஷ்டானங்களுக்கு அமைய அக்கணியுடன் சங்கமித்து தாகனம் செய்த போதிலும், உலக முஸ்லிம்கள் கைக்கொள்ளும் மார்க்க வழிமுறைப்படியான நல்லடக்க முறையை தடை செய்து பலாத்காரமாக எரிக்கப்பட்டது.
இந்த ஜனாஸா எரிப்பானது இலங்கையில் மட்டுமல்லாமல் முழு உலக முஸ்லிம்களையும் சோகக் கடலில் ஆழ்த்தியதோடு , இலங்கை முஸ்லிம்களுக்கு, உலக இறுதி நாள் பரியந்தம் வரையில் வரலாற்று ரீதியிலான ஒரு சோக நாளாகும்.
31. 03. 2023 அன்று இரவு நீர் கொழும்பு பலகத்துறைச் சேர்ந்த முகம்மத் ஜமால் எனும் ஒரு முஸ்லிம் சகோதரர் கோரோனாவால் மரணித்தார்.
அவரின் ஜனாஸா இன்று போல் ஒரு நாளான அன்று, இரவோடு இரவாக
அக்கினி உடன் சங்கமித்த மூன்றாவது வருடமாகும்.
கொரோனா வைரஸ் மூலமாக மரணிக்கும் ஜனாஸாக்களை மார்க்க வழிகாட்ளின் அடிப்படையில் அடக்கம் செய்ய அனுமதிக்ப்படல்வேண்டும் என்ற கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி சகல முஸ்லிம் அமைப்புக்களினாலும் அப்போதய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு அமைவாக உலக சுகாதார நிறுவண வழிகாட்டலில் அடிப்படையில் 2020 மார்ச் 27 ஆம் திகதி அரச சுகாதார பிரிவு வெளிட்ட அறிக்கையில் கொரோனா மரணங்களை எரிக்கவும் முடியும் அடக்கவும் முடியும் என்ற முடிவை அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
இவ்வாறான ஒரு வெளியீடு இருக்கும் நிலையில் இதையும் பொறுப்படுத்தாமல் இரவோடு இரவாக முதல் ஜனாஸா எரிக்கப்பட்டது.
இந்த ஜனாஸா எரிப்புச் சம்பவத்தை சமுதாய உணர்வுள்ள எந்த மனிதனாலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத ஒரு சம்பவம் ஆகும்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை