ராஜகுமாரியின் சுயம்வரம்-20

ராஜகுமாரியின் சுயம்வரம்-20

தேநீர்  விருந்தும் முடிந்தது எல்லோருக்கும் களைப்பும் பறந்தது இனி என்ன மணி ஆறாக நெருங்கிக் கொண்டு இருக்க தாய் மார் பிள்ளைகளை ஒவ்வொன்றாகக் குளிக்க வைக்கவும் பெரியோர் உடைகளை ஸ்த்திரி போடவும்ஆரம்பித்தார்கள்  

வீடே ஒரு கலகலப்பாகவே இருந்தது இங்கு மட்டும் இல்லை ஆங்காங்கே உள்ள வீடுகளிலும் பிள்ளைகளின் ஓசை எழும்பத்தான் செய்தது. 

அப்போது ராக்காயி இவர்களைப் பார்த்துச் சொன்னார் இந்தக் கோயில் திருவிழா நேரத்தில்  தான் எங்கும் ஒரே சத்தமும் மகிழ்ச்சியும் அயல் ஊரில் குடி போனோரும் வேறு நாட்டுக்குப் போன சொந்த பந்தங்களும் அவர் அவர் உறவுகளின் வீட்டில் வந்து மூன்று நாள் ஒரு வாரம் தங்கி முருகப் பெருமானை தரிசிக்க வந்து விடுவார்கள்  எல்லாம் முடிய அவர்களும் சென்று விடுவார்கள்  அதற்குப் பின் அமைதியாகிடும் ஊரே ஆனால் மனசு தான் குழம்பி போய் விடும் தானும் தடியுமான வாழ்வாக மாறியதும் கொஞ்ச நாளில் சரியாகி விடும் இதுதான் எங்க வாழ்க்கை என்று கூறி லூசியாவைப் பார்த்து சிரித்தார் 

பதிலுக்கு லூசியாவும் சிரித்தாள்  ராக்காயி அண்டியின் மன வேதனையை உணர்ந்தும் காட்டிக் கொள்ளாமலே.   எல்லோரும் அழகாய் பார்த்துப் பார்த்து உடைகளை மாற்றி மாற்றி கட்டி ஒரு வழியாக தாயாராகி விட்டார்கள். 

அப்போது ராக்காயி சின்னம்மா எங்கே என்ற வாறு அங்கும் இங்கும் நடந்தார் பாட்டியைத் தேடி இந்தாக்கா இருக்கேன் புள்ள என்னாச்சு ராக்காயி என கேள்வியோடு வந்தார் பாட்டி 

ஒரு விசயம் கேட்டுக்க வேணும் மறந்துட்டேன் சின்னம்மா அதுதான் கூப்பிட்டேன் என்றார் என்ன அது என பாட்டி மீண்டும் கேட்டதும் நம்ம புது விளைச்சல்  நிலத்தில் எடுத்த நெல்லைத் தானே அமுது கொடுக்க எடுக்க வேணும் சின்னம்மா என ராக்காயி கேட்க பாட்டி சொன்னார் இது என்ன புதுக் கேள்வி அதுதானே காலா காலமும் நடப்பது இன்று வந்து இப்படி கேட்காய் என்ன நடந்தது எனக் கேள்வியோடு ராக்காயி முகத்தைப் பார்த்தார் பாட்டி  அது அறுவடை  காலம் இன்னும் கொஞ்ச நாள் இருக்கு சின்னம்மா அது தான். ஓ அப்படியா சரி அதை நாளை பார்ப்போம் இப்போ கிளம்புங்க. நேரத்தோட போய் ஆலய வீதியில் ஓர் இடம் பிடிப்போம் என்றார் நல்லம்மா பாட்டி பாட்டி குரல் கேட்டதுமே அனைவரும் வெளியானார்கள்  ஆளுக்கு ஒரு பொருட்கள் கையில் எடுத்துக் கொண்டு.
(தொடரும்)






 



Post a Comment

Previous Post Next Post