கிராமத்தவர்கள் தமக்குள்ளேயே பலதையும் பேசிக்கொண்டு, அவ்விடத்தை விட்டும் நகரலாயினர்.
ஆனால் தியானத்தில் ஈடுபட்டிருந்த யோகியாரின் முகம், விடியலில் கண்டதை விடவும் தேஜஸ் மிகுந்து காணப்பட்டது; அது ஏன் என்பதுதான் செரோக்கி, ரெங்க்மா இருவருக்குமே புரியவில்லை!
விடியலின்போது ஆகாரம் உண்ட யோகியார் திடீரென மறைந்துவிட்டார். அந்திசாயும் வரை குகைக்குள் இல்லாமல் இருந்திருக்கின்றார்.
பெரியகல், கல்லடிவாரம், அலவத்தை, அம்புலுவாவ போன்ற இடங்களிலெல்லாம் அவரைத் தேடி அலைந்துவிட்டு, குகையைச்சூழவுள்ள இடங்களில் தேடியும், அவர் கிடைக்காமல் போய்விட்ட நிலையில் அந்திசாயும் வேளை, குகைக்குள் அவர் தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
இனிமேல் யோகியார் குகைக்குள் இல்லாமற் போனால் தேட வேண்டிய தேவையிருக்காது; அவரே வந்து விடுவார்; தியான பலம் கொண்டு மறைந்துவாழும் திறன் அவருக்கு இருக்கின்றது என்று தனக்குள் திடமான நம்பிக்கை கொண்டவனாக செரோக்கி, ரெங்க்மாவை அழைத்துக் கொண்டு தன் மனை நோக்கி நடந்தபோது, செரோக்கியின் தாய் போசனம் ஏந்தியவளாக குகைக்குள் நுழைந்தாள்!
சூரியன் உதயமாகியும், ரெங்க்மா விழித்தெழும்பவில்லை; நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்! செரோக்கி தனது நண்பன் இர்வினைப் பார்த்துவர ஆயத்தமானான்.
பெற்றோரிடம் தான் நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, மனையை விட்டும் வெளியானான்! கடந்த காலங்களைப் போல் இப்போது ஒழித்து, மறைத்து நகருக்குச் செல்லத் தேவையில்லை! இர்வின் செரோக்கியின் நகரத்து நண்பன் என்பதுவும், அவர்கள் இருவரினதும் நட்பு மிகவும் நெருக்கமானதும், யதர்த்தமானது என்பதுவும் செரோக்கியின் பெற்றோருக்கு நன்றாகத் தெரியும்!
வழமைபோல் கல்லிடுக்கு வரை கால்நடையாக வந்த செரோக்கி, உந்துருளியை வெளியில் எடுத்தபோது திடுக்கிட்டான்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
தொடர்கதை