தூண்டில்....!

தூண்டில்....!


'ஸ்கேன் ரிப்ஃபோர்ட்'டை, பார்த்தபின் நிமிர்ந்தார், டாக்டர். அக்ஸய் படேல்.

"சுந்தர்ராஜ்... உங்களுக்கு பிராப்ளம் இருக்குன்னு ஸ்கேன் ரிப்ஃபோர்ட் சொல்லுது. இரண்டுவாரம் மருந்து தாரேன். வலி குறையிலைன்னா, ஆப்ரேஷன் தான் செய்யவேண்டி வரும்..."

"ஆப்ரேஷன் கண்டிப்பா செய்துதான் ஆகணுமா, டாக்டர்..."

"முதலில், மருந்தை சாப்பிடுங்க... தைரியமா இருங்க. மனசப்போட்டு குழப்பிக்காதீங்க..."

சுந்தர்ராஜ் வீடு.

"புஷ்பா, ஒரு லெமன் டீ போட்டுவை. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்..."

குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு பூசி, வெளியே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார், சுந்தர்ராஜ்.

"என்னங்க... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, உங்க ஃப்ரெண்ட் மனோகரன் போன் செஞ்சிருந்தாருங்க.."

"மனோகரனா...? என்ன விஷயமா போன் செஞ்சிருப்பான்..!" சொல்லிக்கொண்டே, தன் செல்போனை எடுத்தார், சுந்தர்ராஜ்.

"வணக்கம் அண்ணே... உங்களை ஆஸ்பத்திரியில் பார்த்ததாக என் பையன் சொன்னான். உடம்புக்கு சுகமில்லையா..? அண்ணே..."

விஷயத்தைச் சொன்னார், சுந்தர்ராஜ்.

"என்னச் சொல்றீங்க... ஆபரேஷனுக்கு பதினைஞ்சு லட்சம் ஆகுமா...? நானும், பணத்துக்கு ஏற்பாடு செய்றேன்..."

சுந்தர்ராஜிற்கு ஆபரேஷனுக்கு பதினைஞ்சு லட்சம் செலவாகும் என்ற விஷயம், நண்பர்கள், உறவினர்களிடையே பரவியது.

இரண்டு வாரங்களில், இருபது லட்சம் பணம் கிடைத்தது, சுந்தர்ராஜிற்கு.

"மனோகரன்... வர்ற ஞாயிற்றுக்கிழமை, எல்லோர்க்கும் மதியம் விருந்துக்கு ஏற்பாடு செய்திட்டேன். எல்லோரும் கலந்துக்கணும் சரியா..."

"சரியண்ணே... நானும் எல்லோரிடம்  சொல்லுறேன்..."

ஞாயிற்றுக்கிழமை.

விருந்துமுடிந்ததும், எல்லோரும் அமர்ந்திருந்தனர். 

 "அண்ணே.... உங்களுக்கு புதன்கிழமை ஆபரேஷன் நடக்கிறதா சொன்னீங்க. நானும் உங்ககூட வரவா...?"

மனோகரன் சொன்னதைக் கேட்டதும் சிரித்தார், சுந்தர்ராஜ்.

"ஆப்ரேஷனா...? யாருக்கு...? எனக்கா.? சாதாரண கிட்னி ஸ்டோனுக்கு, இரண்டுவாரம் மருந்து சாப்பிட்டா குணமாயிடும்ன்னு டாக்டர் சொன்னார். குணமாகலைன்னா தான் ஆபரேஷன் செய்யணும்ன்னு சொன்னார். இப்போ நான் நார்மலா இருக்கேன். ஆச்சரியமா இருக்குதா மனோகரன்...? சொல்றேன்..."

சிலவிநாடி கழிந்ததும்...

"என்னிடம் வட்டிக்கு வாங்கின பணத்தை எல்லாம், நீங்க எல்லோரும் திருப்பி தரலை. நானும் கேட்டு, கேட்டு சோர்ந்திட்டேன். எப்டி உங்கிட்ட இந்த பணத்தை எல்லாம் வசூல் பண்ணுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தபோதுதான், சாதாரண கிட்னி ஸ்டோனை, பெரிய கேன்சர் நோய்ன்னு, ஆபரேஷன் செய்ய பதினைஞ்சு லட்சம் ரூபாய் செலவாகும்ன்னு பொய் சொன்னேன். அதை நம்பி, எனக்கு தரவேண்டிய பணத்தையெல்லாம், நீங்க எல்லோரும் கொண்டு தந்துட்டீங்க. இந்த காலத்தில நேர்மைக்கு மதிப்பே இல்லை மனோகரன்..."

கோபால்



 



2 Comments

  1. மிக்க மகிழ்ச்சி
    என் அன்பு அண்ணா

    ReplyDelete
  2. சாதுர்யம் ..
    சிறப்பு அன்புத் தம்பி

    ReplyDelete
Previous Post Next Post