நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 196 ஓட்டங்கள் குவித்தது. அசலங்கா 67 ஓட்டங்களும், குசால் பெரேரா 53 ஓட்டங்களும் விளாசினர்.

நியூசிலாந்தின் நீஷம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடைசி பந்தில் சிக்ஸர்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஒரு பந்துக்கு 7 ஓட்டங்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அப்போது நியூசிலாந்தின் இஷ் சோதி சிக்ஸர் விளாசினார். இதனால் ஆட்டம் டை ஆனது. அதன் பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் வெற்றி
முதலில் ஆடிய நியூசிலாந்து 2 விக்கெட்டுக்கு 8 ஓட்டங்கள் எடுத்தது. தீக்ஷணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அசலங்கா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார்.    
lankasri




 



Post a Comment

Previous Post Next Post