எந்த உணவுப் பொருட்கள் உடல் நலனை கட்டி காக்க வளர்க்க மிகவும் உறுதுணை உணவாக இருக்குமோ அவற்றை எல்லாம் அடிப்படை உணவு என்கிறோம்.
இரண்டாவது உடம்பில் கழிவுகளை சேர்த்து கெடுதல் செய்யக்கூடியது எதிர்மறை உணவு என்றும் பார்த்தோம்.
மேலும் நமது உணவில் 80 சதவீதத்திற்கும் மேல் காரம் அதாவது அல்கலைன் நிறைந்த உணவு சேர்த்துக் கொள்வது நல்லது எனவும்
20% அமில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் பார்த்தோம். சரி அமிலத்தன்மை காரத்தன்மை என்பது என்ன என்பதை குறித்து இன்று பார்க்கலாம்.
நமது உடலில் செரிமான திறனுக்காகவும் நமது உடலில் ஏற்படக்கூடிய நோய்க்கிருமிகளை அழிக்கவும் தேவைப்படுவது அமிலத்தன்மை அது மிகக் குறைந்த அளவில் 20% மட்டுமே தேவைப்படுகிறது.
ஆனால் இன்று நாம் உண்ணக்கூடிய உணவில் எண்பது சதவீதம் அமிலத்தன்மையான உணவுகளையும் வெறும் 20% அல்லது 10% கார உணவுகள் அதாவது அல்கலைன் உணவுகளை நாம் எடுக்கின்றோம்.இதனால் அமிலம் அதிகரித்து நமது உள் உறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கிறது.
உப்பு கசப்பு காரம் ஆகிய சுவைகளில் அல்கலைன் அதாவது காரத்தன்மை அதிகமாக உள்ளது. உயிரோட்டம் உள்ள காய்கறிகள் பழங்கள், தானியங்கள்,எண்ணை வித்துக்கள், விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நாடி நரம்புகள் தூய்மை படுகின்றன நமது உடம்பு முழுவதும் பிராண சக்தி ஓடிப் பரவ செய்கிறது. இதனால் நமது உடலில் உயிரோட்டம் அதிகரிக்கிறது. இத்தகைய உணவுகள் தான் நமது உடலுக்கு நன்மை செய்பவை.
அமிலத்தன்மை உள்ள உணவுகள் துவர்ப்பு இனிப்பு, புளிப்பு போன்ற சுவைகளில் அமிலம் அதிகமாக உள்ளது. இவை உயிரோட்டத்தை தடைப்படுத்தி நோய்களை உருவாக்க காரணமாக இருக்கின்றது.
அமில உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த அளவிற்கு நோய்களின் தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. எனவேதான் பழுத்த பழங்களும் பச்சை நிறம் உள்ள காய்கறிகளும் நமது உடலின் பாதுகாப்புக்கு முன்னணியில் நிற்கின்றது. இவை உடலை ஆரோக்கியமாக வைத்து உடலை வளர்க்கவும் செய்கின்றது. எனவே உயிரோட்டம் அதிகம் உள்ள உணவுகள் எவை என்பதை குறித்து அடுத்த வாரம் நாம் விரிவாக பார்க்கலாம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக.
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்