ஆட்டத்தையே மாற்றிய நடராஜன்.. மீண்டும் DEATH SPECIALIST என்பதை நிரூபித்து அசத்தல்.. ரசிகர்கள் பாராட்டு !

ஆட்டத்தையே மாற்றிய நடராஜன்.. மீண்டும் DEATH SPECIALIST என்பதை நிரூபித்து அசத்தல்.. ரசிகர்கள் பாராட்டு !

தமிழக வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

எனினும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணியின் நீல ஜெர்சியை அணிவார் என தமிழக ரசிகர்களும் அவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அவர் களமிறங்கியுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இதில் 5-வது ஓவரை வீசிய நடராஜன் ஓவரில் 17 ரன்கள் விலாசப்பட்டது. ஆனால் நம்பிக்கை இழக்காத நடராஜன் இறுதி கட்டத்தில் 17,19 ஓவரை வீசி அந்த இரண்டு ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால், இந்த போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. எனினும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய நடராஜனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதே போன்ற பந்துவீச்சை நடராஜன் தொடர்ந்தால் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post