Ticker

6/recent/ticker-posts

இரண்டாவதுT20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் வெற்றி


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

Dunedin மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 

குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றார். 

அடம் மிலன்  5 விக்கெட்களை வீழ்த்தினார். 

நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கைக் கடந்தது. 

டிம் செய்ஃபர்ட் 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட  சர்வதேச T20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளன.

தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை க்ரைஸ்சர்ச்சில் நடைபெறவுள்ளது.
 



 



Post a Comment

0 Comments