Ticker

6/recent/ticker-posts

Ad Code



AI தொழில்நுட்பத்தில் ‘கிங்’ என்றால் ரூ.1.5 கோடி வரை சம்பளம்! முழு விவரம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சிறிதளவேனும் திறமை இல்லை என்றால் உங்கள் வேலைக்கு ஆபத்துதான் என்கிற நிலை உருவாகிறது. AI சாட்போட் ஆன, ChatGPT-ல் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது.

ResumeBuilder-ன் சமீபத்திய ஆய்வுகளின்படி, 91% நிறுவனங்களில் இருக்கும் வேலை காலி இடங்கள், சாட்ஜிபிடி அறிந்த நபர்களுக்கவே ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் வாயிலாக உற்பத்தித்திறனை மேம்படுத்தலாம் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மேலும், நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வளர்ந்து வரும் தேவை கவர்ச்சிகரமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

சில நிறுவனங்கள் ChatGPT நிபுணர்களுக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாயை (1,85,000 அமெரிக்க டாலர்கள்) ஊதியமாகக் கொடுக்க தயாராக உள்ளனர். எடுத்துக்காட்டாக, ChatGPT-ல் தேர்ச்சி பெற்ற ஒரு மூத்த இயந்திர கற்றல் பொறியாளரை நிறுவனங்கள் பணி அமர்த்துகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 125,000 டாலர்கள் முதல் 185,000 அமெரிக்க டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

Interface.ai எனும் உரையாடல் AI கருவி வடிவமைப்பாளர்கள், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் ChatGPT போன்ற பெரிய மொழி மாடல்களை உருவாக்கும் திறனுள்ள இயந்திர கற்றல் திறனுள்ள நிபுணர்களைத் தேடுகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 1,70,000 அமெரிக்க டாலர்களை சம்பளமாக கொடுக்க நிறுவனம் தயாராக உள்ளது.

ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களை கையில் எடுப்பதால், வேலை இழப்புகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என பலர் கவலைபட்டு வருகின்றனர். ஆனால், இதே தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய தொழில்களை மேற்கொள்ளும் ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் நிறுவனம், தற்போது நல்ல முன்னேற்றத்தை சந்தித்து வருவதாக கூறி இருக்கிறது.

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட AI ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக், ஒரு ப்ராம்ப்ட் பொறியாளர், லைப்ரரியன் ஆகியோருக்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 2.5 கோடி ரூபாய் (335,000 அமெரிக்க டாலர்) வரை சம்பளம் வழங்கி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போக்கு சான் பிரான்சிஸ்கோவில் மட்டும் இல்லை. உலகளவில் தொழில்நுட்பங்களை அறிந்த வேலை ஆட்களின் தேவை அதிகரித்து வருவதை காண முடிகிறது. இந்தத் துறையில் வளர்ந்து வருவதை உணர்ந்து, ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் துறையில் தேர்ச்சி பெறும் வகையில் படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தனிநபர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் AI மற்றும் அதன் திறனை ஏற்றுக்கொண்டதால், ChatGPT, கூகுள் Bard போன்ற தொழில்நுட்ப அறிவில் திறமையான வேலை ஆட்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது. 

செயல்திறனை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ப்ராம்ட் பொறியல் எழுச்சியானது AI இன் சக்தியைப் பயன்படுத்தும் புதிய ஆற்றலைக் கொண்டுள்ளது. 

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தை ஆராயத் தயாராக இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

news18


 



Post a Comment

0 Comments