Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா வேற்றுலக வாகனங்களை வைத்திருக்கிறதா? உண்மையை மறைக்கிறதா?


(படம்: Getty Images North America/AFP/Drew Angerer)

அமெரிக்கா வானில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருள்களையும் அவற்றைச் செயல்படுத்திய மனிதர்கள் அல்லாதவர்களின் பாகங்களையும் வைத்திருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி டேவிட் குருஷ் (David Grusch) அந்தத் தகவல்களை அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத பொருள்களை மீட்கும் திட்டம் குறித்து தமது அதிகாரபூர்வப் பணிகளின்போது தெரிந்துகொண்டதாக அவர் கூறினார்.

மேல்விவரங்கள் கேட்டபோது அது ரகசியத் தகவல் என்றும் பொது அவையில் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.

அத்தகைய பொருள்கள் குறித்துத் தகவல் அறிந்தோரைத் தாம் தனிப்பட்ட முறையில் பேட்டி எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர்கள் நம்பகமான ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் திரு. குருஷ் கூறினார்.

தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கிர்பி வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா இல்லையா என்பது குறித்து தமக்குக் கருத்து ஏதுமில்லை என்றார்.


mediacorp


 



Post a Comment

0 Comments