உயர் ரத்த அழுத்தத்தை காட்டிக்கொடுக்கும் கால்கள்.. அறிகுறிகள் இதுதான்!

உயர் ரத்த அழுத்தத்தை காட்டிக்கொடுக்கும் கால்கள்.. அறிகுறிகள் இதுதான்!

உயர் ரத்த அழுத்தம் என்பது சமீப காலமாக பலரையும் பாதித்து வருகிறது. இது சைலன்ட் கில்லர் என்று கூறப்படுகிறது. ஏனெனில், உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இது என்று கூறும் அளவுக்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லை. இது உறுப்புகளை பாதிக்கத் தொடங்கும் வரை டயக்நோஸ் செய்வது கடினமாகும்.
 
இதயத்தின் செயல்பாடு குறைவது முதல் சீரற்ற ரத்த ஓட்டம், சிறுநீரகங்கள் சேதப்படுத்துவது வரை இதன் பாதிப்பு இருக்கும். கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று சரிசெய்யவில்லை என்றால் பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கொல்கத்தாவின் பெல்லி வ்யூ மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர் மருத்துவர் ராதிகா மஹாபத்ரா "உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான நோயாகும். உயர் ரத்த அழுத்தத்தின் தொடக்கத்தைக் கண்காணிக்கவும், அது ஏற்படுத்தும் உடல்நலச் சிக்கல்களைச் சமாளிக்கவும் சில வழிகள் உள்ளன“ என்று கூறியுள்ளார்.

உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்சனை இதயத்தை சீராக செயல்படவிடாமல் கடினமான சூழலை உருவாக்குகிறது. இதனால் ஏற்படும் அதிக அழுத்தம், இருதயத்தில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்துகிறது. தொடர்ந்து ரத்த நாளங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது.

நம் உடலில், ரத்த அழுத்தத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், சில அறிகுறிகள் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.

பாதங்கள் ஜில்லென்று இருக்கும் : 

உயர் ரத்த அழுத்தம், நரம்பில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்தும். இவற்றில் சில நம் கால்களிலும் பாதங்களிலும் உள்ளன. அப்போதுதான் கால்கள் மற்றும் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், கால்கள் குளிர்ச்சியாக இருக்கும். இதனை அவர்கள் எளிதில் உணர முடியும்.

தோல் நிறத்தில் மாற்றம் : 

உயர் ரத்த அழுத்தத்தின் மற்றொரு அறிகுறி, கால்கள் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தில் திடீரென ஏற்படும் மாற்றமாகும். சிவப்பு அல்லது நீல நிறத்தில் கால்விரல்களை நாம் காணலாம்.

கூச்ச உணர்வு : 

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு அறிகுறி என்னவென்றால், கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் கூடுதல் கூச்ச உணர்வு இருக்கும்.

முடி கொட்டுதல் : 

கால்களில் எதிர்பாராத முடி உதிர்தல் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கால்கள் மற்றும் 
பாதங்களில் அதிக 
இரத்த அழுத்தத்தின் 
பிற அறிகுறிகள் : 

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது கால்கள், பாதங்களில் தோன்றக்கூடிய பிற அறிகுறிகளின் பட்டியல் இங்கே.

  • கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம்
  • கால்களில் பலவீனமான துடிப்பு
  • கால்களில், பாதங்களில் பளபளப்பான தோல்
  • கால்களின் தோல் நிறத்தில் ஏற்படும் மாறுபாடுகள்
  • கால் நகங்களின் வளர்ச்சி குன்றி போவது, கால் நகங்கள் உடைவது
  • கால்விரல்கள், கால்கள் அல்லது பாதங்களில் வரும் புண்கள் குணமடையாமல் இருப்பது.

news18


 



Post a Comment

Previous Post Next Post