Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி-36


சென்ற வாரத் தொடரில் நாம் நமது உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆற்றல் தேவைப்படுகின்றது.  
அந்த ஆற்றலை தயாரிக்கப்படும் ஓர் இடம்தான் நமது செல்லில் காணப்படுகின்ற மைட்டோகாண்ட்ரியா என்று பார்த்தோம். 

அதை குறித்த சில தகவல்கள் கீழே நாம் சர்க்கரை நோயைப் பற்றிய நீரழிவு நோயைப் பற்றிய ஒரு அலசலை தான் வருகின்றோம்.

மைட்டோகண்ட்ரியா பெரும்பாலும் செல்லின் ஆற்றல் மையங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

நமது உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவது அவற்றின் முக்கிய செயல்பாடு ஆகும். ஆனால் ஆற்றல் உற்பத்தியை விட மைட்டோகாண்ட்ரியாவின் பணி அதிகமாக உள்ளது. ஏறக்குறைய அனைத்து வகையான மனித உயிர்களுக்கும் தேவையான ஒன்று இந்த ஆற்றல் மையம் தான்.

நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது , தேவையானது எவ்வாறு எனில் ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவை சமைப்பதற்கு எவ்வாறு சமையலறை என்ற ஒன்று தேவைப்படுகின்றதோ அது போலவே நமது உடலில் ஆற்றலை தயாரிப்பதற்கு ஒரு சமையல் அறை தான் மைட்டோகாண்ட்ரியா.

இந்தக் கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா எவ்வாறு செயல்படுகிறது அவை எப்படி இருக்கும் மேலும் அவைகள் தங்கள் வேலையை சரியாக செய்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம் ஒவ்வொரு செல்லிலும்  மைட்டோகாண்ட்ரியாவின் அளவு0.75 முதல் 3 மைக்ரோமீட்டர்கள் வரை இருக்கும்.

நமது உடலில் அனைத்து பாகங்களிலும் இவை பரவி இருக்கும்.இது ரத்த சிவப்பணுக்களில் காணப்படுவதில்லை ஆனால் கல்லீரலில் 2000 திற்கும் அதிகமான மைட்டோகாண்ட்ரியாக்கள் காணப்படுகின்றது தசை இருதய தசை செல்களில் உள்ள சைட்டோபிலாஸத்தில் சுமார் 40% மைக்ரோ கண்ட்ரி ஆவால் சூழ்ந்து இருக்கிறது மைட்டோகாண்ட்ரியா விந்தணுக்களில்  அவற்றின் நீந்தும் சக்தி (motility)க்கு நடுப்பகுதியில் சுழன்று  இயக்கத்திற்கு ஆற்றல் வழங்குகிறது.
இவற்றின் பணிகளை சொல்லும் போதே சுவாரசியமாக உள்ளது. உடல் என்பது இயந்திரத்திற்கு ஒப்பானது. மைட்டோகாண்ட்ரியா நாம் உண்ணும் உணவில் இருந்து ரசாயன ஆற்றலை செல்கள் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் வடிவமாக மாற்றுகிறது இதைத்தான் ஏடிபி என்கிறோம். இந்த செயல்முறை ஆக்ஸிஜன் ஏற்ற பாஸ்பாரிலேஷன் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு உடல் நல குறைவு ஏற்படும் பொழுது இந்த மைட்டோகாண்ட்ரியாவின் பணிகளும் குறைகின்றது.   உதாரணமாக புற்றுநோய் போன்ற சில நோய்களும் அசாதாரணமான  ஒரு முடிவை உள்ளடக்கி இருப்பதால் மைட்டோகாண்ட்ரியா நமது உடல் நலக்குறைவின் போது முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் நமது உடலில் எலும்புகளின் பங்கு இன்றியமையாதது. செல்களின் செயல்முறைகளுக்கு கால்சியம் தேவைப்படும் அந்த கால்சியத்தை மீண்டும் உடலுக்கு தேவைப்படுவதாக மாற்றி நரம்பு செல்களில் இருந்து மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் இருந்தும் ஹார்மோன்களை வெளியிடுவதற்கும், மற்றும் தசைகளின் செயல்பாடுகளுக்கும், கருத்தரித்தல் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் கால்சியத்தை செயல் வடிவமாக மாற்றுவதற்கு இந்த ஆற்றல் மூலம் தேவைப்படுகிறது.

மேலும் நமது உடலின் வெப்ப மற்றும் குளிர் இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மைட்டோகாண்ட்ரியாவின் பணி தேவைப்படுகிறது.

காண்றியா சரியாக வேலை செய்யாமல் இருக்கும் பொழுதும் ஆற்றலை கொடுக்காமல் இருந்தாலும் அவற்றை அவற்றின் எண்ணிக்கை குறையும் பொழுதும் நமக்கு 
      1. பார்க்கின்சன்ஸ்
      2. அல்ஜிமர்
      3. பைபோலார் டிஸ்ஆர்டர்
      4. சிசோபெர்ணியா
      5. நாள்பட்ட களைப்பு
      6. ஹன்டிங் டென் டிசீஸ்
      7. நீரிழிவு அதாவது சர்க்கரை நோய்
      8. ஆட்டிசம்
போன்ற நோய்கள் நம்மை தாக்குகிறது.

மைட்டோகாண்ட்ரியா என்பது மிகச் சிறந்த ஒரு உறுப்பு ஆகும். மேலும் அவை செல்லின் பவர் ஹவுஸ் என்று நாம் கூறினாலும் அவை நாம் அறியாத பல பணிகளை செய்து வருகிறது. கால்சியம் சேமிப்பிலிருந்து நமது உடலில் ஆற்றலை உருவாக்குவது வரை மைட்டோகாண்ட்ரியா நமது செல்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது இவற்றை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பதை குறித்து அடுத்த வாரம் நாம் பார்ப்போம்.

மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


 



Post a Comment

0 Comments