Ticker

6/recent/ticker-posts

வேட்டைக்கு எட்டு வருடங்கள்-AI RIZANA AND AI KAYALVILI-VIDEO


"கல்ஹின்னை நயீம்" என்பவரிடத்தில் சர்வதேச ரீதியான சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்ற எண்ணக்கரு ஒன்று 1990ம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. 

"வெளிநாடு" என்ற பெயரில் சஞ்சிகை அச்சிடுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஈராக் தேசம், குவைத் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், சகலதும் கைவிட்டுப்போனது. 
இருந்தபோதிலும்,அவரின்  எண்ணக்கரு கைவிடப் படாததால், "வேட்டை" என்ற பெயரில் இணையவழிச் சஞ்சிகை ஒன்றை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அது இப்போது சிகரம் தொட்டு நிற்கின்றது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சர்வதேசத்து, சிறந்த பல எழுத்தாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் ஆக்கங்களைப் பதிவிட்டுவரும் இச்சஞ்சிகை, கல்ஹின்னை என்ற கிராமத்தைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நவீன தொழில்நுட்பத்தின் அண்மைக்கால சாகசச் சிகரமான செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI கொண்டு, இலங்கையில் முதன் முதலாக செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்திய பெருமை "வேட்டை" இணைய சஞ்சிகையையே சாருகின்றது. 

எட்டாவது வருடத்தில் கால் பதிக்கும்,  "வேட்டை"யிடமிருந்து எதிர்காலத்தில் சிறந்த பல ஆக்கங்களை வாசகர்களும், நேயர்களும் எதிர்பார்க்கலாம்.


 



Post a Comment

2 Comments

  1. வளமான வாழ்த்துகள்♥

    ReplyDelete
  2. பெயருக்கு ஏற்றது போன்று ஆடை அணிவது கட்டாயம் இல்லாட்டி பெயர்களை மாற்றி இப்படி படம் நடிங்க இனி உருப்பட்டமாதிரிதான் உங்க நிருவனம்

    ReplyDelete