Ticker

6/recent/ticker-posts

"பார்கின்ஸன்ஸ்" நோய்க்கான சிகிச்சை முறைகள்


எனது மனைவிக்கு அதிக இரத்த அழுத்தம் ஏற்படவே உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டி ஏற்பட்டது.

தொடர்ந்து சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவளுக்கு "பார்கின்ஸன்ஸ்” (Parkinson's disease) நோய் என்று நரம்பு சம்பந்தமான டாக்டர் கூறினார்.

மனைவிக்கு தற்போது வயது 63 இந்த நோயால் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக பீடிக்கப்பட்டுள்ளார். சில நேரங்களில் மனைவி அறியாமலே பின்நோக்கி விழுந்து விடுகின்றாள். இதற்காக நீங்கள் கூறும் வைத்திய ஆலோசனை என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.
தையூப் அம்பகஹலந்த, ரஜவெல்ல, திகன 
பதில்: பார்கின்சன்ஸ் நோய் (Parkinson's disease) CLP OGUL 6T சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். இந்நோய் மூளையினால் எமது உடம்பின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக வேண்டி சுரக்கப்படுகின்ற சில திரவப் பதார்த்தங்களின் குறைபாட்டினால் ஏற்படுகின்றது. இது அனேகமாக 60 வயதைத் தாண்டியவர்களிடையே கூடுதலாகத் தாக்குகின்றது. பெண்களை விட ஆண்களையே இந்நோய் அதிகமாகத் தாக்குகின்றது.

இந்நோய்க்கான சரியான காரணம் கண்டறியப்படாவிட்டாலும் கூட வயது கூடும் போது ஈரலின் தொழிற்திறன் குறைதல், இரசாயனப் பொருட்களடங்கிய உணவுகளை உட்கொள்ளல், சூழல் மாசடைதல், சில மருந்துகள், மூளைத் தொற்று நோய்கள் போன்றவைகளினால் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது. அத்துடன் ஈயத் தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்களிடையேயும் இந்நோய் அதிகம் காணப்படுகின்றது.

இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாக நடுக்கம், உடம்பின் அவயவங்கள் அதிக பாரம் போல் உணர்தல், அசைவுகளின் போது தாமதம், இலகுவில் களைப்படைதல் போன்றவைகள் இருக்கும். நோயின் தீவிரத்தன்மை கூடும் போது பசியின்மை , உடம்பு கூசுதல், தசைகளை அசைக்க முடியாத நிலை, பேச்சுக் கஷ்டம், வழமை போல் நடக்க முடியாது போதல், மனநிலை மாற்றம், மென்மையான பேச்சு, மலச்சிக்கல் போன்ற பல நோய் அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் இயற்கையான உணவுகளை உண்டு, தினமும் உடற்பயிற்சி செய்பவர்களிடையே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. எனவே இந்நோய் வராமல் தடுப்பதாயின் ஆரம்பத்திலிருந்தே இயற்கை உணவுகள் உட்கொண்டு தினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

இந்நோய் ஏற்பட்டுவிட்டால் குணமாக்குவது என்பது சற்று கடினமான விடயமாகும். நோயின் ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகளைக் கொடுப்பதிலிருந்து வைத்தியர்கள் தவிர்ந்து கொள்வார்கள். ஆனாலும் போதியளவு உடற்பயிற்சி, பெளதீகச் சிகிச்சை மற்றும் Physiotherapy போன்றவைகளைச் சிபார்சு செய்வார்கள். ஆனால் நோயின் குறிகுணங்கள் தனது அன்றாட வாழ்க்கைக்கு இந்நோய் ஏற்பட்டுவிட்டால் குணமாக்குவது என்பது சற்று கடினமான விடயமாகும். நோயின் ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகளைக் கொடுப்பதிலிருந்து வைத்தியர்கள் தவிர்ந்து கொள்வார்கள். ஆனாலும் போதியளவு உடற்பயிற்சி, பௌதீகச் சிகிச்சை மற்றும் Physiotherapy போன்றவைகளைச் சிபார்சு செய்வார்கள். ஆனால் நோயின் குறிகுணங்கள் தனது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால் நோய்க் குறிகுணங்களுக்கு ஏற்ப மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. உணவைப் பொறுத்தவரையில் சமைக்காத உணவுகளையும் (raw food), தானிய வகைகள், பால்,பழ வகைகள், மரக்கறிவகைகள் போன்றவைகளை அதிகமாக உட்கொள்ளலாம்.

அத்துடன் கொழுப்புக் கூடிய உணவு களையும், எண்ணெயில் பதனிடப்பட்ட உணவுகளையும் மிகக் குறைந்தளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தும், சுவாசிக்கும் காற்றிலிருந்தும், இரசாயனப் பொருட்களுடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் மூலமாகவும் எமது உடம் புக்குள் செல்லுகின்ற நச்சுப் பொருட்களே இந்நோய்க்கு காரணமாகும்.

எனவே நச்சு நீக்கிய வேடமொழி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுர்வேத மற்றும் யூனானிச் சிகிச்சை முறைகளில் நச்சு நீக்கிச் சிகிச்சை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாட்பட்ட நோய்கள் எதுவானாலும் நச்சு நீக்கிச் சிகிச்சை முறை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 

நோன்பு நோற்பதும் ஒரு நச்சு நீக்கியாகத் தொழிற்படுகின்றது. அத்துடன் நபித்துவ மருத்துவத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா சிகிச்சை முறையும் நச்சு நீக்கியாகத் தொழிற்படுகின்றது.

மேலும் இந்நோயாளிகளுக்கு விட்டமின் குறைபாடு ஏற்படாதவாறு வைத்தியர்களின் ஆலோசனைப்படி விட்டமின்கள் கொடுப்பது முக்கியம்.

ஆயுர்வேத, யூனானி சிகிச்சை முறைகளில் இந்நோய்க்குச் சிகிச்சையளிக்கும் போது சில விசேட சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகளின் மூளையின் தொழிற்பாட்டைக் கூட்டுவதற்கும் நோயின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்குமான முறைகள் கையாளப்படுகின்றன. இந்நோயாளிகள் நவீன மருத்துவ மாத்திரைகளுடன் யூனானி சிகிச்சையையும் சேர்த்து மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனது மனைவிக்கு இந்நோய் இருப்பதாகவும் அவர் தன்னை அறியாமலே பின்நோக்கி விழுந்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நோயின் காரணமாக நரம்பு மற்றும் தசைத்தொகுதிகள் பாதிக்கப்படுவதால் உடலைச் சமநிலைப்படுத்தல், நடத்தல் போன்ற சமயங்களில் விழக்கூடிய வாய்ப்பு அதிகம். அத்துடன் இந்நோயாளியின் வயது 63 என்பதால் விழும் போது எலும்புகள் முறியக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட Walking aid எனப்படும் நடப்பதற்கு உதவக் கூடியவைகளைப் பாவிப்பதன் மூலம் விழுவதைத் தவிர்க்கலாம். 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக 'பார்க்கின்சன்ஸ் நோய் என்பது உங்களது முழு வாழ்க்கையையுமே முடக்கி விடும். எனவே இயற்கை உணவுகளை உட்கொண்டு தொடர்ச்சியாக தேகப்பயிற்சியும் செய்து மேற்கூறிய நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும்.


 



Post a Comment

0 Comments