Ticker

6/recent/ticker-posts

நட்டுல வச்சேன்னு நெனச்சியா... கணவனுக்கு காபியில் விஷம் வைத்த பாசக்கார மனைவி!


அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மெலடி ஃபெலிகானோ ஜான்சன்.36 வயதாகும் இவர் தனது முன்னாள் கணவர் ராபி ஜான்சன் என்பவர் உடன் வாழ்ந்து வருகிறார். ராபி ஜான்சன் ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே விவாகரத்தாகிவிட்ட போதிலும்  ஒன்றாக  வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 

காபியில் விஷம்

இந்நிலையில் பணி காரணமாக இவர்கள் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி செல்ல வேண்டி இருந்தது.  அங்கு தான் மெலடி தனது கணவர் ராபிக்கு காபியில் பாத்ரூமை சுத்தம் செய்யும் bleach ஐ கலந்து கொடுக்க தொடங்கி உள்ளார். ஆரம்பத்தில் மனைவி காபி போட்டு கொடுக்கிறார் என ஆசையோடு இரண்டு மூன்று வாரங்களுக்கு குடித்த கணவருக்கு நாட்கள் செல்ல செல்ல அந்த காபியில் ஏதோ கலக்கப்படுகிறது என தெரிய வந்திருக்கிறது.

இதனால் குழப்பமடைந்த ராபி ஒரு வேளை தண்ணீரில் ஏதேனும் கலக்கப்படுகிறதா என யோசித்துள்ளார் இதற்காக தண்ணீரின் ரசாயன அளவை கணக்கிட  ph பேப்பர் கொண்டு பரிசோதித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீரில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதே பரிசோதனையை காபியில் செய்து பார்த்துள்ளார். அப்போது காபியில் வைத்ததும் அதன் நிறம் மாறி உள்ளது. இதனால் ஏதோ தவறாக இருக்கிறது என புரிந்து கொண்ட ராபி காபி குடிப்பதையே நிறுத்தி உள்ளார். ஆனால் இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரியாது. தினமும் மனைவி காபி கொடுத்தவுடன் அதை குடிப்பது போல் நடித்துவிட்டு அவர் பார்க்காத நேரத்தில் கீழே ஊற்றி விட்டு சில காலம் வந்துள்ளார்.

பொருத்தப்பட்ட ரகசிய கேமரா

அதற்குள் அந்த பணி முடிந்து ஜூன் 28ஆம் தேதி அவர்கள் அமெரிக்காவுக்கு திரும்பி உள்ளனர். இந்த முறை மனைவியை கையும் களவுமாக பிடிக்க நினைத்த கணவன் ராபி மனைவி யோசிப்பதற்கு முன்னதாகவே ஜெர்மனியில் இருந்து வந்தவுடன் ஜூலை 1 தேதியே அந்த குடியிருப்புககுள் ரகசிய கேமராக்களை வைத்துள்ளார். வழக்கம்போல மெலடி காபி மெஷினில் bleach ஐ கலக்கும்போது கையும் களவுமாக வீடியோ ஆதாரத்துடன் சிக்கி இருக்கிறார். உடனே அந்த வீடியோ பதிவுடன் ஜூலை 6ஆம் தேதி தனது மனைவி மீது டியூஷன் போலிசில் புகார் அளித்தார். 

விஷம் கலந்ததற்கு இதுதான் காரணம்

இதன் பின்னர் விசாரணை நடைபெற்ற நிலையில் இறுதியில் மெலடிக்கு 250000 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் சிறை  என்று உத்தரவிட்டனர். மேலும் அவர் நீதிமன்றத்திற்கு பணம் செலுத்தாததால் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கை விசாரித்த போலீசார் கணவன் ராபி இறந்த பிறகு கிடைக்கும் மரண சலுகைகளை பெறுவதற்காக மெலடி இது போன்ற செயலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

SOURCE:zeenews


 



Post a Comment

0 Comments