Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -13


குறள் 1123 
கருமணி யிற்பாவாய் 
நீபோதாயாம் வீழும் 
திருநுதற்கு இல்லை இடம். 
கண்ணின் மணியே!  

லண்டனில் இருக்கும் 
என்பேத்தியுடன் 
நேற்று ஸ்கைப்பில்  
பேசினேன்! 
அவள்என் 
கண்ணுக்குள்ளேயே 
இருக்கா! 
தாத்தாதாத்தான்  
அப்பிடி பேசினா! 
நீகொஞ்சம்  
நகந்துக்குரியா? 
அவளுக்கு கண்ல 
இடங்கொடுக்கணும்! 

குறள் 1124 
வாழ்தல் உயிர்க்கன்னள் 
ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
 
பள்ளிக்கூட விடுமுறையில 
இந்த தாத்தா பாட்டியோட 
தினமும் சிரிச்சு 
விளையாடி நேரம்போச்சு! 
இன்னக்கி உன்ஊருக்கு 
கௌம்புற! 
எங்களோட இருந்தா
உயிர் இருக்குற மாதிரி இருக்கு! 
ஊருக்குப் போறேன்  
நெனச்சாலே 
உயிர்போகுது 
ஏக்கத்துல! 

குறள் 1125 
உள்ளுவன் மன்யான் மறப்பின் 
மறப்பறியேன் ஒள்ளமர்க் 
கண்ணாள் குணம். 

நம்ம 
செண்டுக்குட்டி 
கண்ணப்பாருங்க! 
துறுதுறுன்  
சண்டபோட்ற மாதிரி 
துள்ளுது! 
அவகுணங்களநான் 
மறந்தாதானே 
நெனெக்குறதுக்கு! 
மறக்குறதும் இல்ல! 
அதனால 
நெனெக்குறதும் இல்ல! 

குறள் 1126 
கண்ணுள்ளின் போகார் 
இமைப்பின் பருகுவரா 
நுண்ணியர் எம்காதலவர். 

என்மடியில 
படுத்துக்கிட்டு
என்னயே உத்துப் 
பாக்குறான் என்மகன்! 
அவன்தான் என் 
கண்ணுக்குள்ளேயே 
இருக்கான்! 
நான் இமைச்சாலும் 
என்ன விட்டுப் போகமாட்டான்! 
என்மேலே அவக்கு 
அவ்வளவுஉயிர். 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments