சவுதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரால், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால மேம்பாட்டுக்காக வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்ட காணியை, சில உலமாக்கள் விற்பனை செய்ய முற்பட்டது தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகின.
பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட காணியை விற்பனை செய்யக் கூடாது என ஊர் மக்கள் ( கேவியட் ) தடை உத்தரவையும் பெற்று, கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சுமார் ஆறு வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
இவ்வழக்கானது இன்று 26.09.2023 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கடும் வாத விவாதங்களுக்கு மத்தியில் வாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன , மற்றும் ஹஸித பெரேரா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
பொதுமக்கள் சார்பில் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன அவர்கள்.
"இது முஸ்லிம் மக்கள் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றும் இடம். இது ஒரு பள்ளிவாசல். இதை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இது மக்கள் தொழுகைக்காக பாதுகாக்கப்பட வேண்டும்" என வாதங்களை முன் வைத்தார்.
உலமாக்கள் சார்பில் வாதாடும் சட்டத்தரணிகள், இது பள்ளிவாசல் அல்ல, நமது அதிகாரத்தின் கீழ் உள்ள தனிநபர் சொத்து என வாதாடி வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அந்நிய மக்கள் இது பள்ளிவாசல், இது பாதுகாக்கப்பட வேண்டும் என வாதாடும் அதேவேளை, உலமாக்கள் இது பள்ளிவாசல் அல்ல என நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசிகளை வழங்கியிருப்பதும் இவ்வழக்கின் ஒரு குறிப்பிடத்தக்க விசித்திர அம்சமாகும்.
கடும் வாத விவாதங்களுக்கு மத்தியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments