Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய 3 இந்தியர்கள்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை


துபாய் : எமிரேட்ஸ் டி10 லீக்கின் 2021 தொடரின் போது பல்வேறு ஊழல்கள் செய்ததாக இந்திய அணியின் உரிமையாளர்களான பராக் சங்வி மற்றும் கிரிஷன் குமார் சவுத்ரி உட்பட எட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.  
இரண்டு இந்தியர்களும் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்கள் மற்றும் அந்த சீசனில் அவர்களது வீரர்களில் ஒருவரான முன்னாள் வங்காளதேச டெஸ்ட் வீரர் நசீர் ஹொசைன் லீக்கின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இதே போன்று, இந்தியாவை சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் , சன்னி தில்லான் ஊழல் புகாரில் சிக்கி உள்ளார். . "2021 அபுதாபி T10 கிரிக்கெட் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அந்த போட்டியின் போட்டிகளை ஊழல் செய்ய முயற்சித்த போது தான் இவர்கள் சிக்கி உள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சங்வி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் 2.2.1 மற்றும் 2.4.6 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளின் முடிவுகள், , குறித்து பிக்சிங் செய்வது மற்றும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தவறியதற்காக சங்வி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று கிரிஷன் குமார் மீது ஊழல் தொடர்பாக உரிய நேரத்தில் அதிகாரிகளிடம் புகார் அளிக்காமல் விட்டதற்காக தடை செயப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நசீர், "750 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பரிசை DACO விடம் தெரிவிக்கத் தவறியதற்காக" குற்றம் சாட்டப்பட்டார். 3 இந்தியர்கள் உட்பட 6 பேர் தற்காலிகமாக கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் அனைவருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க செவ்வாய் முதல் 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

Source:mykhel


 



Post a Comment

0 Comments