Ticker

6/recent/ticker-posts

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு


காலிஸ்தான் அமைப்பின் தலைவரின் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவை விட்டு வெளியேறும்படி இந்திய மக்களுக்கு காலிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று காலிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது, இது, கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

"இந்தோ - இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள், இந்தியாவுக்குச் செல்லுங்கள், நீங்கள் இந்தியாவை மட்டும் ஆதரிக்கவில்லை, காலிஸ்தானை ஆதரிக்கும் சீக்கியர்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் உணர்வை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையையும் ஆதரிக்கிறீர்கள்" என்று காலிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் அமைப்புக்கு தடை

இது, கல்வி, வேலை என பல்வேறு நோக்கங்களுக்காக கனடா சென்றிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு காலிஸ்தான் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, இதனால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் தலைவர் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் வைத்து கொல்லப்பட்டார்.

இதற்கு இந்திய அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தமையும் அதனை தொடர்ந்து கனடாவின் இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டமையும் அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரி வெளியேற உத்தரவிட்டமையும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பரஸ்பர ஒற்றுமையை குறைத்துள்ளது.

இந்நிலையில், காலிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கனடா வாழ் இந்தியர்களிடையே பதற்ற நிலையினை உருவாக்கியிருக்கிறது. 

Source:ibctamil


 



Post a Comment

0 Comments