Ticker

6/recent/ticker-posts

அப்படிதான் இழுத்து போடு.. சொல்லிக் கொடுத்த இலங்கை.. இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச்சில் நடந்த அதிசயம்


இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மழை பெய்தது. 

அப்போது வழக்கம் போல ஆடுகளத்தை தார்ப்பாலின் விரிப்புகளை கொண்டு மூடத் துவங்கினர் ஊழியர்கள். ஆனால், என்ன ஒரு அதிசயம். மொத்த மைதானத்தையும் நிறைய தார்பாலின் விரிப்பை கொண்டு மூடி விட்டார்கள். இதுவரை இந்திய ஆடுகளங்களில் மழை பெய்யும் போது மைதானத்தின் மையப் பகுதி மற்றும் அதைச் சுற்றி சில இடங்களை மட்டுமே மூடுவார்கள்.

பவுண்டரியை ஒட்டி இருக்கும் மைதானத்தின் பகுதிகள் மழையில் நனைந்திருக்கும். அதனால், அங்கே மழை நின்ற பின்னும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதை அகற்ற ஊழியர்கள் படாத பாடெல்லாம் படுவார்கள்.

ஃபேன் போட்டு காய வைப்பது, மணல் போட்டு அந்த இடத்தை மூடுவது, சுண்ணாம்பு கொட்டுவது ஒரு முறை அயர்ன் பாக்ஸ் கொண்டு அந்த இடத்தை தேய்த்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்திய மைதானங்களில் மழையின் போது மோசமான நிர்வாக செயல்பாடுகள் வெளிப்படும். ஆனால், இந்த முறை மழை பெய்த உடன் மொத்த மைதானத்தையும் மூடியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது, அதன் காரணமாகவே, மழை நின்ற உடன் போட்டி விரைவாக தொடங்கியது. எங்குமே மழை நீர் தேங்கவில்லை.

இந்திய கிரிக்கெட்டில் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஒவ்வொரு போட்டியிலும் மழை பெய்தது. ஆனால், அங்கிருந்த மைதான ஊழியர்கள் மொத்த மைதானத்தையும் தார்பாலின் விரிப்புகளை கொண்டு மூடினார்கள்.

அது ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் பெரிய படிப்பினையாக இருந்தது. அதை இந்திய கிரிக்கெட் மைதானங்களும் பின்பற்ற துவங்கி உள்ளது நல்ல விஷயம் தான். உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐக்கும் அதன் மைதான நிர்வாகிகளுக்கும், இலங்கை அதை சொல்லாமல் சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தான் உண்மை. இனி போட்டிகள் மழையால் கைவிடப்படுவது பெரும் அளவில் குறையும்.

Source:mykhel


 



Post a Comment

0 Comments