Ticker

6/recent/ticker-posts

மொரோக்கோ நிலநடுக்கம் - ஒரு வகுப்பறையின் அனைத்து மாணவர்களும் மரணம்...துயரத்தில் ஆசிரியர்


மொரோக்கோவை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியபோது, ஓர் ஆசிரியருக்கு முதலில் மனதிற்குத் தோன்றியது அவரின் மாணவர்களைப் பற்றிய நினைவுதான். 

நஸ்ரின் அபு அல்ஃபடல்...

மலைப்பகுதியில் உள்ள அடாசீல் (Adaseel) என்னும் கிராமத்தின் பள்ளி ஆசிரியர். ஆனால் நிலநடுக்கம் நடந்தபோது நஸ்ரின் மற்றோர் ஊரில் இருந்தார்.

மாணவர்களைத் தேடி நஸ்ரின் அடாசீல் நகர் சென்றார்.

"இவர் எங்கே? அவர் எங்கே?" எனக் கிராமத்தில் மாணவர்களைத் தேடினார்.

சில மணி நேரம் கழித்துப் பதில் கிடைத்தது.

வகுப்பு மாணவர்கள் 32 பேரும் மாண்டுவிட்டனர் என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

அவர்கள் 6 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள மாணவர்கள்.

அவர்களின் கடைசி வகுப்பு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (8 செப்டம்பர்)... நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு நடைபெற்றது.

நஸ்ரின் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக BBC குறிப்பிட்டது.

தொடர்ந்து ஆசிரியராகப் பணிபுரியப்போவதாகவும் அதிகாரிகள் மீண்டும் கிராமத்தில் பள்ளியைக் கட்டித் தருவர் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் மாண்டனர்.

Source:seithi


 



Post a Comment

0 Comments